சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல தடை.. மாநகராட்சி ஆணையர் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை : மக்கள் கவனக்குறைவாக இருந்தால் கொரோனா 3 ஆவது அலை வரும் என்று எச்சரித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதியில்லை என்று கூறினார்.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. Chennai Corporation எடுத்த அதிரடி நடவடிக்கை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. 1700ல் இருநது 2000த்தை நெருங்கி உள்ளது. சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

    பெண்கள் பெயரில் ஃபேக் ஐடி.. ஆண்களை ஆபாசமாக எடுத்த 80 வீடியோக்கள்.. அதிர வைக்கும் மோசடி.. 5 பேர் கைதுபெண்கள் பெயரில் ஃபேக் ஐடி.. ஆண்களை ஆபாசமாக எடுத்த 80 வீடியோக்கள்.. அதிர வைக்கும் மோசடி.. 5 பேர் கைது

    இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 9 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    கடைகளுக்கு தடை

    கடைகளுக்கு தடை


    கோவையில் முக்கிய வணிகப்பகுதிகளில் ஞாயிறுகளில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அத்தியாவசிய கடைகள் செயல்படும் நேரத்தையும் மாலை 5 மணிஆக குறைத்துள்ளர். கோவை போல் மற்ற நகரங்களிலும் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் விரைவில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    கோயில்கள் திறப்பு

    கோயில்கள் திறப்பு

    கூட்டம் அதிகமாக கூடும் இடங்களை மூடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆடி மாதம் என்பதால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களுக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோயில், கந்தக்கோட்டம், குன்றத்தூர் முருகன்கோயில் மற்றும பிரபல அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மக்களுக்கு எச்சரிக்கை

    மக்களுக்கு எச்சரிக்கை

    இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுபற்றி , சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி,
    கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை. மக்கள் கவனக்குறைவாக இருந்தால் கொரோனா 3 ஆவது அலை வரும். எனவே, அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டும் மக்கள் வீட்டை விட்டு வௌியே வர வேண்டும்.

    ஆணையர் விளக்கம்

    ஆணையர் விளக்கம்

    திருமண விழாக்களில் கலந்துகொள்ளும்போது தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். விஷேச நாள்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு செய்ய வேண்டும் . தவிர்க்க முடியாத காரணத்தினால் சென்னையில் 9 இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.

    English summary
    People are not allowed to go to the beach including the marina in Chennai, gaganDeep Singh Bedi order
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X