சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி விஜய் நாளை காலை ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
விஜய்யுடன் செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் திங்கட்கிழமை பதவியேற்கிறார்கள்.
May 09, 2026, 11:23 pm IST
எம்.ஜி.ஆருக்கு பின் விஜய் சாதனை!
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார் விஜய்.. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வென்று 34.9% வாக்குகள் பெற்று வரலாறு படைத்து இருக்கிறார் விஜய்.
May 09, 2026, 10:21 pm IST
ப சிதம்பரம் விஜய்க்கு வாழ்த்து
தலைவர் விஜய்க்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! நிலையான நல்லாட்சி தருக! உயர் பொருளாதார வளர்ச்சியையும் மக்களுக்குப் பயன் தரும் நலத்திட்டங்களையும் தங்கள் அரசு தரவேண்டும் என்று விழைகிறேன் என ப சிதம்பரம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் த.வெ.க. தலைவர் திரு விஜய் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! 💐
நிலையான நல்லாட்சி தருக!
உயர் பொருளாதார வளர்ச்சியையும் மக்களுக்குப் பயன் தரும் நலத்திட்டங்களையும் தங்கள் அரசு தரவேண்டும் என்று விழைகிறேன்
தமிழகத்தின் முதல்வராக நாளை விஜய் பதவியேற்கும் நிலையில் தமிழகம் முழுக்க பட்டாசு வெடித்து தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அவர்கள், “முதல்வர் விஜய்.. முதல்வர் விஜய்” என கோஷம் எழுப்பி, விஷில் ஊதி உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்..
May 09, 2026, 9:56 pm IST
விஜய்க்கு வைகோ வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு, ம.தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மை கோட்பாட்டையும், சமூக நீதியையும் பாதுகாக்கின்ற அரசாக உங்களுடைய ஆட்சி அமைந்திட விழைகிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.
May 09, 2026, 9:40 pm IST
விஜய் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்?
May 09, 2026, 9:40 pm IST
நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்புக்கான பணிகள் தீவிரம்
May 09, 2026, 9:40 pm IST
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள நிலையில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்
May 09, 2026, 9:17 pm IST
காங்கிரசில் இருவருக்கு அமைச்சர் பதவி?
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக விஜய் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதன்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமார் (காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர்) மற்றும் விஸ்வநாதன் அமைச்சரவையில் இடம்பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
May 09, 2026, 9:17 pm IST
புஸ்சி ஆனந்துக்கு நகராட்சி நிர்வாகத் துறை?
தமிழகத்தின் முதல்வராக நாளை விஜய் பதவியேற்க உள்ள நிலையில், செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
May 09, 2026, 9:17 pm IST
புஸ்சி ஆனந்துக்கு நகராட்சி நிர்வாகத் துறை?
தமிழகத்தின் முதல்வராக நாளை விஜய் பதவியேற்க உள்ள நிலையில், செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
May 09, 2026, 9:17 pm IST
விஜய்க்கு தந்தை சந்திரசேகர் அறிவுரை
தமிழகத்தின் முதல்வராக சி.ஜோசப் விஜய் நாளை பதவியேற்க உள்ள நிலையில், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், “விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ‘தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்’ என்பதுதான்.. விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்” என்று கூறினார்.
May 09, 2026, 9:16 pm IST
தமிழகத்தில் முதல் முறை கூட்டணி ஆட்சி
விஜய்யின் தவெக காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்.எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியுள்ளது. இதில் காங்கிரஸ் மட்டுமே தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்திலும் பங்குகொள்கிறது. நாளை விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில், கூடவே 9 அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். மேலும் காங்கிரசுக்கு இந்த அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
May 09, 2026, 9:16 pm IST
விஜய்யை பார்த்து பொதுமக்கள் ஆரவாரம்
மக்கள் மாளிகையில் இருந்து வெளியே வந்த விஜய்க்கு சாலையின் இருபுறமும் நின்றிருந்த தவெகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்று உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். விஜய்யும் தொண்டர்களின் வாழ்த்துக்களை வணக்கம் கூறி ஏற்றுக்கொண்டார்..
May 09, 2026, 8:59 pm IST
விஜய்யை பார்த்து பொதுமக்கள் ஆரவாரம்
மக்கள் மாளிகையில் இருந்து வெளியே வந்த விஜய்க்கு சாலையின் இருபுறமும் நின்றிருந்த தவெகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்று உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். விஜய்யும் தொண்டர்களின் வாழ்த்துக்களை வணக்கம் கூறி ஏற்றுக்கொண்டார்..
May 09, 2026, 8:44 pm IST
13 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
நாளை தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் விஜய் வரும் 13 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
May 09, 2026, 8:35 pm IST
தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு
May 09, 2026, 8:35 pm IST
நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கிறார் விஜய்
May 09, 2026, 8:35 pm IST
தமிழ்நாட்டின் முதல்வராக அரசமைப்பு பிரிவு 164-இன் கீழ் விஜய்க்கு ஒப்புதல் வழங்கினார் ஆளுநர் அர்லேகர்
May 09, 2026, 8:33 pm IST
விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர் அர்லேகர்
May 09, 2026, 8:33 pm IST
பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாட்கள் கெடு விதித்தார் ஆளுநர் ஆர்லேகர்
May 09, 2026, 8:33 pm IST
நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது
May 09, 2026, 8:27 pm IST
ஆளுநர் அர்லேகரை சந்தித்துவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் வெளியே வந்த விஜய் உற்சாகத்துடன் காணப்பட்டார். காரில் வெளியே வந்த விஜய் அங்கிருந்த மக்களை பார்த்து சிரித்துக்கொண்டே உற்சாகத்துடன் கையசைத்தார்.
May 09, 2026, 8:26 pm IST
சி.ஜோசப் விஜய் எனும் நான்.. நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்!
தவெக தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பான்மை கிடைத்த நிலையில் விஜய் இன்று 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சந்திப்பு இப்போது முடிந்துள்ளது.
May 09, 2026, 8:11 pm IST
விஜய்யை இன்றே ஆட்சி அமைக்க அழைக்கிறாரா ஆளுநர்?
விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆளுநர் அர்லேகரை 4-வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பின் போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த செல்வப்பெருந்தகை, பெ சண்முகம் உள்ளிட்டோரும் விஜய்யுடன் வந்திருந்தனர். பெரும்பான்மையை காட்டியுள்ளதால் இன்று இரவே விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது
May 09, 2026, 7:56 pm IST
மீண்டும் தயாராகும் நேரு அரங்கம்!
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், விரைவில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை பிற்பகல் 3.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விழா அரங்கில் இருக்கைகள், விளக்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
May 09, 2026, 7:56 pm IST
விஜய்யுடன் யார் யார் பதவியேற்கிறார்கள்?
விஜயுடன் நாளை செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், சத்தியபாமா, ஜேசிடி பிரபாகர், வெங்கட்ரமணன் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
May 09, 2026, 7:53 pm IST
விஜய் பதவியேற்பு விழா நாளை பிற்பகல் 3.15 மணியளவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். இதில் செங்கோட்டையன், அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரசுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
May 09, 2026, 7:48 pm IST
பெரும்பான்மை கிடைத்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பானது நடந்தது. நாளை பிற்பகல் 3.15 மணிக்கு பதவியேற்பு விழா நடக்க உள்ளது எனவும், விஜய்யோடு சேர்த்து 10 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
May 09, 2026, 7:47 pm IST
நாளை பிற்பகல் 3.15 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
May 09, 2026, 7:46 pm IST
நாளை பிற்பகல் 3.15 மணிக்கு தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கிறார். விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
READ MORE
12:08 PM, 7 May
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய் 2வது முறையாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஆளுநர் பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் கேட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பின் விஜய் முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் விஜய் முதல்வராக பதவியேற்க இருந்த சிக்கல் தீர்ந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
12:14 PM, 7 May
தவெக தலைவர் விஜய் - ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இடையிலான 45 நிமிட சந்திப்பு நிறைவடைந்தது. இந்த சந்திப்பின் இறுதியில், ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளன.
12:25 PM, 7 May
விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக விஜய் அடுத்தக் கட்டமாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
12:42 PM, 7 May
விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய 3 கட்சிகளுடன் தவெக ஆதரவு கோரி இருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பிற்கான பின்னணி தொடர்பாக விவாதங்கள் தொடங்கி இருக்கிறது. இந்த 3 கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
1:27 PM, 7 May
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக எம்எல்ஏ-க்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆளுநர் தரப்பில் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பதவியேற்பை நடத்த உயர்நீதிமன்றத்தை நாடலாமா என்றும் தவெக வழக்கறிஞர்களுடன் விஜய் ஆலோசித்து வருகிறார்.
2:39 PM, 7 May
தவெக தலைவர் விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆளுநர் தரப்பில் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆளுநர் தரப்பில், தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் இல்லை. இதன் காரணமாகவே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2:47 PM, 7 May
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது. இதனால் ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கான காரணம் குறித்த விவாதங்கள் தொடங்கி இருக்கிறது.
3:21 PM, 7 May
தவெக ஆட்சி அமைக்க விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டப்படி எங்களை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கூறிய சிடிஆர் நிர்மல் குமார், ஆளுநர் சட்டப்படி நடப்பார் என்று நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.
4:32 PM, 7 May
நாங்கள் கொள்கைக் கூட்டணியில் இருக்கிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். தவெகவுக்கு ஆதரவு கொடுங்கள் என்று திமுக கூறினால், நாங்கள் ஆதரவு அளிப்போம். ஸ்டாலின் முடிவே, எங்களின் முடிவாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
4:32 PM, 7 May
தவெக அழைப்பை ஐயூஎம்எல் நிராகரித்திருக்கிறது. தவெக ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் கட்சியிடம் அக்கட்சியின் நிர்வாகி அருண் ராஜ் ஆதரவு கோரி இருந்தார். அதற்கு ஐயூஎம்எல் காதர் மொய்தீன், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு இல்லை. திமுக - ஐயூஎம்எல் இடையிலான உறவு வெறும் தேர்தலுக்கான உறவு அல்ல.
5:21 PM, 7 May
118 எம்எல்ஏ-க்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திப்பார் என்று புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசியலில் அதிசயம் நிகழும் என்று கூறியுள்ள அன்பழகன், சென்னையில் வெயில் அதிகம் என்பதால், அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
7:13 PM, 7 May
தவெகவுக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சி நடைபெறுகிறது என தவெக எம்.எல்.ஏ அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்னை புறப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
9:41 PM, 7 May
"ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி, தம்மிடம் போதுமான எண்ணிக்கையில் பலம் இருக்கிறது என்பதையும், தங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதையும் எனக்குத் திருப்திப்படுத்தும் வகையில் தெரிவிக்க வேண்டும். இது ஒன்றுதான் எனது நிபந்தனை” என தமிழக ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளார்.
12:15 AM, 8 May
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கலாம் என்ற தகவல் தீயாகப் பரவி வருகிறது. இந்நிலையில், திமுக அல்லது அதிமுக ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோரினால், தவெகவின் 108 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
9:34 AM, 8 May
புதுச்சேரியில் தங்கியிருக்கும் அதிமுகவின் 28 எம்எல்ஏ-க்கள் சென்னை அழைத்து வரப்படவுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆதரவு எம்எல்ஏ-க்களின் கடிதங்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை இன்று சந்திப்பார் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
10:19 AM, 8 May
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க சிபிஎம் கட்சியிடம் ஆதரவு கோரி இருந்தார். விஜய்யின் கோரிக்கை தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி இருக்கிறது. இதனால் சிபிஎம் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தவெகவினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
11:14 AM, 8 May
திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, பி வில்சன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனால் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
11:31 AM, 8 May
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் எதிர் எதிர் துருவங்கள்.. இந்த இரு கட்சிகளும் இணைய வாய்ப்பில்லை என்று திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கும் விடை கிடைத்திருக்கிறது.
11:54 AM, 8 May
திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உடனான ஆலோசனைக்கு பின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
12:02 PM, 8 May
யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் துரதிஷ்டவசமாக யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று கூறிய கனிமொழி, மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
12:31 PM, 8 May
தவெக தலைவர் விஜய் அவசர அவசரமாக வீட்டில் இருந்து பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார். பனையூரில் தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடந்து வருகிறது. புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் அங்கிருக்கும் நிலையில், விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
1:14 PM, 8 May
ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் நேரில் வந்து சந்தித்திருக்க வேண்டாமா என்று விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் விமர்சித்துள்ளார். வாட்ஸ் அப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது என்று கூறிய சிந்தனைச் செல்வன், சிலரின் தவறான அணுகுமுறை, அவருக்கு வந்து சேரும் ஆதரவுக்கான வழியை அடைத்து வைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
2:04 PM, 8 May
சிபிஎம் மாநிலக்குழு கூட்டம் நிறைவு; விரைவில் முடிவை அறிவிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மாநில செயற்குழு கூட்டம் முடிந்து, மாநிலக்குழு கூட்டம் முடிந்த பின்னர்தான் கட்சியின் முடிவு அறிவிக்கப்படும்.
2:04 PM, 8 May
‘‘திமுக நாளை மறுநாள் வரை காத்திருக்கும். வரும்10ம் தேதி வரை ‘டைம்’ கொடுக்கப்பட்டுள்ளார். விஜய் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் திமுக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்’’ – திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் என்று கூறியுள்ளார். இன்று காலையில் திமுக – அதிமுக எதிரெதிர் துருவங்கள். கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்த நிலையில் மதியம் நிலைப்பாட்டை மாற்றி உள்ளது இதனால் தான் வரும் 10ம் தேதி திமுக – அதிமுக கூட்டணி அமைக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2:09 PM, 8 May
‘‘திமுக நாளை மறுநாள் வரை காத்திருக்கும். வரும் 10ம் தேதி வரை ‘டைம்’ கொடுக்கப்பட்டுள்ளார். விஜய் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் திமுக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்’’ – திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் என்று கூறியுள்ளார். இன்று காலையில் திமுக – அதிமுக எதிரெதிர் துருவங்கள். கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்த நிலையில் மதியம் நிலைப்பாட்டை மாற்றி உள்ளது இதனால் தான் வரும் 10ம் தேதி திமுக – அதிமுக கூட்டணி அமைக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2:10 PM, 8 May
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நிறைவடைந்திருக்கும் நிலையில், சற்று நேரத்தில் மாநிலக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. மாநில குழுவில் 3ல் 2 பங்கு ஆதரவு கிடைத்தால் மட்டுமே விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க கட்சி திட்டம்.
2:19 PM, 8 May
விஜய் வீட்டிற்கு முன் செய்தியாளர்கள் குவிந்திருக்கும் சூழலில், காரில் வந்த நபர் ஒருவர் முகத்தை மறைத்தபடி வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனால் விஜய்யை சந்திக்க முகத்தை மூடிக்கொண்டு சென்ற நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
3:14 PM, 8 May
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். ஏற்கனவே நேற்று, நேற்று முன் தினம் ஆளுநரை விஜய் சந்தித்திருந்தார். இதனால் தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Will Vijay Form Government in Tamil Nadu (தமிழகத்தில் தவெக விஜய் ஆட்சி அமைப்பாரா?) LIVE News Updates in Tamil: தமிழகத்தில் தவெக விஜய் ஆட்சி அமைப்பாரா? பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை பிற கட்சிகள் ஆதரவு மூலம் பெறுவாரா? தமிழகத்தில் நடக்கும் அடுத்தெடுத்த அரசியல் நகர்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்துருங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.