சபாஷ்! இதுதான் சென்னை போலீஸ்.. ஒரு நாள் ஆக்சன்.. திகைத்துப்போன 'தலைநகர்' மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காலத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 2658 வழக்குகள் பதிவு செயயப்பபட்டு 1822 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் முககவசம் அணியாத 1876 நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 220 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக 24.05.2021 காலை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்பேரில் சென்னை பெருநக காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 24ம் தேதி காலை முதல் முறையான முழு ஊருடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,

இபதிவு கட்டாயம்

இபதிவு கட்டாயம்

அதன்பேரில் சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்த காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்சைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல இபதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு இ பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

337 வாகனங்கள்

337 வாகனங்கள்

அதன் பேரில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் நேற்று மேற்கொண்ட சோதனையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய, தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 311 இருசக்கர வாகனங்கள், 20 ஆட்டோக்கள் மற்றும் 6 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 337 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

1488 வாகனங்கள் பறிமுதல்

1488 வாகனங்கள் பறிமுதல்

மேலும் சட்டம் ஒழுங்கு குழுவினர் நேற்று மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்த கண்காணிப்பு சோதனையில் சென்னை பெருநகரில் கொரேதானா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1038 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 1419 இருசக்கர வாகனங்கள், 62 ஆட்டோக்கள் மற்றும் 14 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 1488 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

மேலும் முககவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1878 வழக்குகளும் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 220 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சென்னை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் திகைத்துப்போய் உள்ளனர். இனி வெளியே சென்றால் வாகனம் பறிமுதல் ஆகும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு அவசியம் இல்லாமல் தயங்குகின்றனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+