வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை.. தமிழக பார் கவுன்சில் சென்னை கமிஷனருக்கு முக்கிய கோரிக்கை
சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து காவல்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை நெம்பர் பிளேட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பார் கவுன்சில் தரப்பில் வழங்கப்பட்ட ஸ்டிக்கர் பயன்படுத்துவதை தடுக்க கூடாது என தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளது.
சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் தலைவர் பி்.எஸ். அமல்ராஜ், சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், போலி வழக்கறிஞர்களை தடுக்க, வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் சார்பில் ஸ்டிக்கர் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வாகனத்தினுடைய ஆர்சி புக், இன்சூரன்ஸ், வழக்கறிஞர் பதிவு ஆகிய ஆவணங்களின் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து பின்னரே ஸ்டிக்கர் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார் ..
மேலும் காவல்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள மோட்டார் வாகன சட்டப்பிரிவுகள் 177 மற்றும் 198 நம்பர் பிளேட் குறைபாடு தொடர்பானது மட்டுமே என்றும், அந்த விதிகளை பயன்படுத்தி வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவதை தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் வழங்கியுள்ள ஸ்டிக்கரை பயன்படுத்தக்கூடிய வாகனங்களை தடுக்க கூடாது தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications