150+ டிகிரி முடித்துள்ளாராம்.. வியக்க வைக்கும் சென்னை பேராசிரியர்.. யாருங்க இந்த பார்த்தீபன்?
சென்னை: சென்னையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பார்த்தீபன் என்பவர் 150க்கும் அதிகமான டிகிரி படிப்புகளை முடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். தாயிடம் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவர் இவ்வளவு டிகிரிகளை முடித்துள்ளார். இது போதாது என்று 200 டிகிரிகளை முடிக்க அவர் தொடர்ந்து முயன்று வருகிறார்.
நம்மில் பலருக்கும் படிப்பு, தேர்வு என்றாலே அலற்சியாக இருக்கும். இதனால் பலரும் ஒரு டிகிரி போதும் என்று கல்லூரி படிப்பை நிறுத்தி கொள்வது உண்டு. இன்னும் சிலரோ கல்லூரி படிப்பை கூட முடிப்பது கிடையாது. அதேவேளையில் சிலருக்கோ படிப்பு என்றால் அப்படி பிடிக்கும். எப்போதும் படித்து கொண்டே இருப்பார்கள்.

தொடர்ந்து பல டிகிரிகளை முடிப்பதோடு, சான்றிதழ்கள் சார்ந்த படிப்புகளையும் முடித்து வைத்திருப்பார்கள். ஆனால், சென்னையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் 150க்கும் அதிகமான டிகிரிகளை முடித்துள்ளார். ஆம், நீங்கள் படித்தது சரிதான். என்னது 150 டிகிரியா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், அது முற்றிலும் உண்மை தான். அந்த பேராசிரியர் யார்? அவர் என்ன செய்கிறார்? எப்படி 150 டிகிரிகளை முடித்தார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் வசித்து வருபவர் விஎன் பார்த்தீபன். தற்போது சென்னை ஆர்கேஎம் விவேகானந்தா கல்லூரியில் இணை பேராசிரியராகவும், வணிக துறையின் தலைவராகவும் இருக்கிறார். இவருக்கு வயது 60. இவர் தான் 150 டிகிரிகளை முடித்துள்ள பேராசிரியர். படிப்பையும், தேர்வு எழுதுவதையும் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டவர். உலகில் தனிநபராக அதிகமான கல்வி தகுதி கொண்ட நபர் என்றால் மிக பொருத்தமாக இருக்கும்.
பார்த்தீபன், 1981ம் ஆண்டு முதல் படித்து வருகிறார். ஒரு பக்கம் கல்லூரியில் பேராசிரியர், மறுபுறம் குடும்பம் என்று இருந்தாலும் கூட பார்த்தீபன் தனது படிப்பை மட்டும் ஒருபோதும் கைவிட்டது கிடையாது. பேராசிரியர் பார்த்தீபன் படிப்புக்கு மனைவி செல்வகுமாரி பக்கப்பலமாக இருந்து வருகிறார். பார்த்தீபன் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை தனது படிப்புக்காகவே செலவிட்டு வருகிறார். சுமார் 90 சதவீத சம்பளத்தை புத்தகம், தேர்வு கட்டணம் என்ற வகையில் செலவழிப்பாராம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் ஆய்வுகள், டிகிரி படிப்புக்கான வகுப்புகள் அல்லது தேர்வுகளை எழுதி வருகிறார். இதுபற்றி பார்த்தீபன் கூறுகையில், ‛‛நான் படிப்பதை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் பிரச்சனையாக இல்லை. கடினமானதாக இல்லை. தேர்வுகளுக்குத் தயாராகி, புதிய பட்டங்கள் அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்'' என்று கூலாக கூறுகிறார்.
தற்போது வரை பார்த்தீபன் 13 எம்ஏ, 8 எம்காம், 4 எம்எஸ்சி, பல பிரிவுகளில் 13 மாஸ்டர் ஆப் லா, 12 எம்பிஎல், 14 எம்பிஏ, 29 புரோபஷனல் கோர்சஸ், 11 சான்றிதழ் படிப்பு, 9 பிஜி டிப்ளமோ படிப்பு உள்பட இன்னும் பல படிப்புகளை முடித்துள்ளார். தற்போதும் கூட அவர் மாஸ்டர் இன் கார்ப்பரேட் லா மற்றும் மேனேஜ்மென்ட்ட்டில் பிஎச்டி படிப்புகளை படித்து வருகிறார்.
இவரது குறிக்கோள் என்னவென்றால் மொத்தம் 200 டிகிரி முடிக்க வேண்டும் என்பதுதான். தற்போது 150 டிகிரியை முடித்த நிலையில் இன்னும் 50 டிகிரியை முடித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பார்த்தீபன் செயல்பட்டு வருகிறார். இப்படி அவர் தொடர்ந்து டிகிரிகளை குவித்து வருவதன் பின்னணியிலும் சுவாரசியமான விஷயம் உள்ளது.
ஏனென்றால் அவர் தற்பெருமை அல்லது சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு டிகிரிகளை முடிக்கவில்லை. மாறாக தனது தாய்க்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக அவர் இப்படி செய்து வருகிறார். அதாவது பார்த்தீபன் தனது முதல் பட்டப்படிப்பில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். அதன்பிறகு அவர் தான் தனது தாய்க்கு நிறைய படிப்புகளை படித்து அதிக மதிப்பெண் பெற்று காட்டுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதனை நிறைவேற்றவே அவர் 150க்கும் அதிகமான டிகிரிகளை முடித்துள்ளார்.
தற்போது அவரது பெயருக்கு பின்னால் டிகிரிகளை போட வேண்டும் என்றால் அது பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இருக்கும் பாடப்பிரிவுகளை சொல்வது போல் இருக்கும். இப்படி ஓய்வின்றி படித்து வரும் பார்த்தீபனுக்கு சில புனைப்பெயர்கள் உண்டு. ‛நடமாடும் என்சைக்ளோபீடியா‛, ‛நடமாடும் கலைக்களஞ்சியம்' என்று அவருக்கு நெருக்கமானவர்கள் அழைப்பது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications