சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே
சென்னை : சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்று 181 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. சென்னையில் 24000 பேருக்கு தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில் உயர்வு எற்பட்டுள்ளதாக கோவிட் டேட்டா அனாலிசிஸ்ட் விஜயானந்த் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த 12 நாட்களில் கொரோனா பாதிப்பு எப்படி இருந்தது என்பதற்கான வரைபடத்தையும் விஜயானந்த் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நீண்ட நாளைக்கு பிற்கு முதல்முறையாக உயர்வை சந்திதுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் 1756 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை இன்று 1,859 ஆக உயர்ந்துள்ளது..

தமிழகத்தில் உயர்வு
இதேபோல் கொரோனா பாதிப்பில் இருந்து 2394 பேர் ஒரே நாளில் நேற்று மீண்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 2145 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னை, கோவை, சேலம், ஈரோடு போன்ற சில முக்கிய மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்திருப்பது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

விஜயானந்த் தகவல்
இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 164 ஆக இருந்த பாதிப்பு இன்று 181 ஆக அதிகரித்துள்ளது என்று கோவிட் டேட்டா அனாலிசிஸ்ட் விஜயானந்த் கூறியுள்ளார். சென்னையில 24000 பேருக்கு தினசரி சோதனை நடத்தப்படும் நிலையில் பாதிப்பு சிறிய அளவில் உயர்ந்து வருவதாக கூறியுள்ளார்.

ஜூலை 18 முதல் எப்படி
அவர் சென்னையில் கடந்த 12 நாட்களாக நிலவிய கொரோனா பாதிப்பு குறித்து வரைபடததையும் வெளியிட்டுள்ளார். அந்த வரைபடத்தின் படி பார்த்தால், ஜூலை 18ம் தேதி 150 ஆக இருந்த சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 147, 141, 138, 133, 130, 127, 126, 122 என கடந்த 26ம் தேதி வரை குறைந்தது.

கொரோனா உயர்வு
ஆனால் ஜூலை 27ம் தேதி முதல் சென்னையில் கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ளது, ஜூலை 27ம்தேதி இந்த எண்ணிக்கை 139 ஆகவும், ஜூலை 28ம் தேதி இந்த எண்ணிக்கை 164 ஆகவும், ஜுலை 29ம் தேதியான (இன்று) 181 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த டேட்டாவின் படி சென்னையில் கொரோனா உயரததொடங்கி உள்ளது தெளிவாகிறது.

தடுப்பூசி போட்டவர்கள்
எனவே சென்னை வாழ் மக்கள் இனி தாமதிக்காமல் கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது நல்லது. நாம் தான் தடுப்பூசி போட்டுவிட்டோமே, நமக்கென்ன என்று நினைத்தால் அதை விட முட்டாள் தனம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ என பல நாடுகளில் அதிகரித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்களை கொரோனா பாதிக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உயிர் பிழைக்கலாம். ஆனால் பாதிப்பு குறைவாக இருக்கலாம் ஆனால் 100 சதவீதம் உத்தரவாதம் கிடையாது. எனவே தடுப்பூசி போட்டாலும் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது நல்லது.

3வது அலை எப்படி
இதேபோல் கடந்த முறை கொரோனா பாதித்தவர்களை இந்த முறை தாக்காது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. 3வது அலையின் தீவிரம் எப்படி இருக்கும் என்பது இனிமேல் தான் தெரியும். இரண்டாவது அலையில் ஏராளமான உயிர்களை இழந்துள்ளோம். 3வது அலையில் அப்படியான நிலை ஏற்படாது என்றாலும், கவனமுடன் இருப்பபதுநல்லது. தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொண்டால் உயிரிழப்பதில் இருந்து தப்பிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அரசு சொல்லும் வழிமுறைகளை கடைபிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.. முதல் அலை, இரண்டாவது அலை முடிந்து 3வது அலை தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. இதற்கு எப்போது முடிவு வரும்.. என்டே கிடையாது எனற் கவலைதான் இப்போது எல்லோரது மனதிலும் ஓடுகிறது.












Click it and Unblock the Notifications