வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! சென்னை சாலைகளில் திணறிய வாகன ஓட்டிகள்! காலையில் குளுகுளு கிளைமேட்
சென்னை: தலைநகர் சென்னையில் காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாகச் சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் மழை அதிகமாகவே இருந்தது.

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது சென்னைவாசிகள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். இப்போது மழை முடிந்துள்ள நிலையில், பனிப்பொழிவு தொடங்கி உள்ளது.
தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. அதேபோல நேற்றிரவும் பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், காலை நேரத்திலும் அதே நிலை தொடர்ந்தது.
குறிப்பாக அண்ணாநகர், கோடம்பாக்கம், வடபழனி, காமராஜர் சாலை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளிலும் சரி புறநகர்ப் பகுதிகளிலும் சரி பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
இதனால் குளிரும் மிகவும் அதிகமாக இருப்பதாகச் சென்னைவாசிகள் கூறுகின்றனர். கடுமையான பனிப்பொழிவு காரணமாக மெரினாவில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
அதேபோல முக்கிய சாலைகளிலும் கூட பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications