சென்னையில் 3 வாரங்களுக்கு பிறகு முதல் முறையாக சூப்பர் மாற்றம்.. ராயபுரத்திற்கு குட்நியூஸ்
சென்னை: சென்னையின் தினசரி கோவிட் தொற்று பாசிட்டிவ் வளர்ச்சி விகிதம் (TPR) கடந்த மூன்று வாரங்களில் முதல் முறையாக 20 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது..
சென்னை மாநகரத்தில் கொரோனா தொற்று பாசிட்டிவிட்டி விகிதம் மே 10 அன்று 26 சதவீதம் என்கிற அளவில் இருந்த நிலையில், தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. மே 16 அன்று 21.15 சதவீதம் ஆக குறைந்தது. தற்போது 19.4 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த சரிவு குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், வெறும் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று (tpr) பரவலைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிற என்றார்கள்

ஆக்டிவ் நோயாளிகள்
சென்னை நகரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மே 10 அன்று 7,149 ஆக இருந்து அதே பாதிப்பு வெள்ளிக்கிழமையான நேற்று (மே 21) 5,913 ஆக குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 10 சதவீதம் நோயாளிகள் மட்டும் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எங்கு குறைவு
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 10 சதவீதத்திற்கும் குறைவான ஆக்டிவ் கேஸ்கள் (நோயாளிகள்) விகிதம் உள்ளது. அதாவது ராயபுரம் 6 சதவீதம், தேனாம்பேட்டையில் 14 சதவீதம் ஆக உள்ளது. திருவெற்றியூர் மற்றும் மணாலி முறையே 15 மற்றும் 14 சதவீதம் ஆக்டிவ் கேஸ்களை கொண்டுள்ளது. மற்ற மண்டலங்களில் எல்லாம் 10 முதல் 14 சதவீதம் வரை உள்ளது.

சோதனை முறையில் மாற்றம்
நோய் தொற்றை சமாளிக்க கோவிட் பராமரிப்பு மையங்களில் அதிக எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "நாங்கள் எங்கள் சோதனை வியூகங்களை மேம்படுத்தியுள்ளோம். நோயாளிகள் இப்போது தங்கள் வீட்டு வாசல்களிலேயே அல்லது தொலைபேசி மூலம் ஆலோசனைகளை பெறுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் நோயாளிகளுக்கு சிகிச்சையின் ஆரம்ப அணுகலை உறுதிசெய்கின்றன,

கார் ஆம்புலன்ஸ்
மேலும் மருத்துவமனைகள் நோய்த்தொற்றின் முதலிடத்தில் இருப்பதால், வார்டுகளுக்குள் உதவியாளர்கள், உறவினர்கள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கை தொற்றுநோயைக் குறைக்க உதவுகிறது. .
கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்ட சிறப்பு ஆம்புலன்ஸ் சேவைகளை (கார் ஆம்புலன்ஸ் உள்பட) 7,647 நோயாளிகள் பயன்படுத்தி ஸ்கிரீனிங் மையத்தை அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்ததனர்.

குறைவான பாதிப்பு
சென்னை. நகரத்தின் கோவிட் தொற்று வளர்ச்சியும் குறைந்து வருகிறது: மே 10 அன்று 3.8 சதவீதத்திலிருந்து மே 18 அன்று இது 1.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 48782 பேர் கொரோனா நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த அலையில் அதிக பாதிப்பை சந்தித்த ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில், 2வது அலையில் குறைவான பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications