மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளி கொன்றவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்.. விழுந்தது தர்ம அடி
சென்னை: சென்னையில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவியை ரயிலுக்குள் தள்ளி படுகொலை செய்த வழக்கில் வாலிபர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இன்று அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வந்தபோது அவரை தூக்கில் போட கோரி கோஷமிட்டவர்கள் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணிக்கம் (வயது 47). இவரது மனைவி ராமலட்சுமி (43). இவர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றினார்.
இந்த தம்பதியின் மகள் சத்தியப்பிரியா (20). இவர் தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தினமும் ரயிலில் சென்று வருவது வழக்கம்.

ரயிலில் தள்ளி மாணவி கொலை
இந்நிலையில் நேற்று சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (23), என்பவர் சத்தியப்பிரியாவை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சதீஷ், சத்தியப்பிரியாவை பரங்கிமலை ரயில் நிலையத்தில் வழிமறித்து பேசி கொண்டிருந்தார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சதீஷ், சத்தியப்பிரியாவை கீழே தள்ளினார். அப்போது மின்சார ரயிலில் சிக்கி சத்தியப்பிரியா உடல் நசுங்கி பலியானார். ஓடும் ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாலிபர் கைது
மேலும் கொலை செய்த பிறகு சதீஷ் அங்கிருந்து ஓடி தலைமறைவானார். அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து சென்னை துரைப்பாக்கத்தில் பதுங்கிய சதீசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 நாள் நீதிமன்ற காவல்
இந்நிலையில் இன்று மாலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சதீசை போலீசார் அழைத்து வந்தனர். இதையடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வரும் 28ம் தேதி வரை சதீஷ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். இதற்கிடையே இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு சதீசை போலீசார் அழைத்து வந்தபோது அங்கிருந்தவர்கள் அவரை தாக்க முயன்றனர். மேலும் அவரை தூக்கில் போட வேண்டும் எனக்கூறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பபான சூழல் ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு சதீசை நீதிமன்ற வளாகத்தில் இருந்து அழைத்து சென்றனர்.

தந்தை தற்கொலை செய்த சோகம்
முன்னதாக மகள் சத்தியப்பிரியா இறந்த சோகத்தில் அவரது தந்தையான மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்தார். ஒரு நாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தியப்பிரியா, மாணிக்கம் ஆகியோரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்பு இறுதி சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications