புறநகரில் வந்தது மாற்றம்.. ஞாயிறு அட்டவணைப்படியே சென்னைய்ல ரயில்கள் இன்று இயங்கும்.. தெற்கு ரயில்வே
சென்னை: கன்னியாகுமரி மற்றும் வேளாங்கண்ணிக்கு வரும் பயணிகளின் வசதிக்காக கடந்த திங்கள்கிழமை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு சென்னை புறநகர் ரெயில் சேவையை மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
வழக்கமாக ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பலரும் குடும்பத்துடன் கோவில்களுக்கு செல்வார்கள்.. அதேபோல, குழந்தைகளை அழைத்து கொண்டு கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று புத்தாண்டை கொண்டாடுவார்கள்.

அந்தவகையில், பொதுமக்களின் நன்மைக்காக, புத்தாண்டை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி, கன்னியாகுமரி மற்றும் வேளாங்கண்ணிக்கு வரும் பயணிகளின் வசதிக்காக கடந்த திங்கள்கிழமை முதல் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வேளாங்கண்ணி: செகந்திராபாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை (டிசம்பர் 30) சிறப்பு ரயில் எண் 07125 இயக்கப்பட்டது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு புறப்பட்ட ரயில் நேற்று இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைந்தது. மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து புதன்கிழமை அதாவது இன்று ஜனவரி 1ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07126) மறுநாள் இரவு 10.45 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
இந்த ரயிலில் 6 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் குண்டூா், தெனாலி, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படவுள்ளது.
அதேபோல, கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து டிசம்பர் 30, ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை தோறும்) மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07367) மறுநாள் பிற்பகல் 3.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 31, ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07368) மறுநாள் இரவு 7.35 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.
ஏசி வகுப்பு பெட்டிகள்: இந்த ரயிலில் 8 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காவேரி, ஹரிஹா், பிரூா், யஷ்வந்த்பூா், பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்பட உள்ளது" என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதேபோல, புத்தாண்டை முன்னிட்டு, புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரெயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.
புறநகர் சேவை: இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரெயில் சேவையை மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரெயில் சேவைகள், ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இன்று இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications