6 மணி நேரம் நகர முடியாது.. 17 ஆண்டுக்கு பின் விடப்பட்ட மெமு ரயிலில் பயணிகளுக்கு இப்படி ஒரு சோதனையா?
சென்னை:17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பீச் - திருவண்ணாமலை இடையே மீண்டும் மெமு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகள் இடையே பெரும் வரவேற்பை இந்த ரயில் சேவை பெற்றுள்ளது. ஆனால், 6 மணி நேரம் வரை ஆகும் நிலையில், ரயிலில் கழிவறை வசதி இல்லை என்ற ஆதங்கம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவை 2007 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. விழுப்புரம் - காட்பாடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக இந்த சேவை நிறுத்தப்பட்டது.

சென்னை பீச் - திருவண்ணாமலை: 2 ஆண்டுகளில் இந்த பணி நிறைவுபெற்றாலும் மீண்டும் ரயில் இயக்கப்படவில்லை. இதனால், ஆண்டுக்கணக்கில் பயணிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். திருவண்ணாமலைக்கு சித்ரா பவுர்ணமி போன்ற நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால், சித்ரா பௌர்ணமி, கிரிவலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் ரயில்கள், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்த ரயில் சேவையை நிரந்தரமாக திருவண்ணாமலை வரை இயக்கப்பட வேண்டும் என்பது திருவண்ணாமலை, வேலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். குறிப்பாக சித்ரா பெளர்ணமி போன்ற விஷேஷ நாட்களில் பல ஆயிரம் மக்கள் கிரிவலத்திற்கு செல்வார்கள் என்பதால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சீக்கிரமாகவே சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.
2 ஆம் தேதி முதல்: இந்த நிலையில்தான், கடந்த 2ஆம் தேதி முதல், அதாவது ரயில் சேவை இனி வரும் நாட்களில் நிரந்தரமாக நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், "தினமும் சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வரை சென்று,
அங்கிருந்து பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் என திருவண்ணாமலை வரை இரவு 12.05க்கு சென்று சேரும் வகையில் இயக்கப்படும்" என்று தெரிவித்திருந்தது. அதேபோல, "மே மாதம் 3ம் தேதியிலிருந்து அதாவது நாளை முதல் திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்" என தெரிவித்திருந்தது.
பயணிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுதே! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை எப்போது.. ரூட் எது? மாஸ் அப்டேட்
கழிவறை இல்லை: சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் இந்த மெமு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரயிலில் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரயில் விடப்பட்டுள்ளதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனாலும், இந்த ரயில் திருவண்ணாமலைக்கு செல்ல சுமார் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், இவ்வளவு நீண்ட தூர பயணம் என்றாலும் பயணிகளுக்காக ரயிலில் ஒரு கழிவறை கூட இல்லை. இது பயணிகள் தரப்பில் முன்வைக்கும் பெரிய குறையாக உள்ளது. வயதான பயணிகள், சிறு குழந்தைகளுடன் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக பயணிகள் கூறுகிறார்கள்.
பயண நேரமும் சரியில்லை: அதேபோல், சென்னையில் இருந்து 6 மணிக்கு கிளம்பும் ரயில் திருவண்ணாமலைக்கு செல்ல இரவு 12 மணி ஆகிறது. எனவே, இரவு நேரத்தில் பெண்கள் பயணிப்பதில் பாதுகாப்பு சிக்கல் இருக்கிறது. ஆகவே, ரயிலின் பயணம் நேரத்தையும் சற்று மாற்றி அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் விட்டாலும் கூட பயணிகள்
17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் விட்டாலும் கூட முழு திருப்தி அடையும் விதமாக இந்த ரயில் சேவை அமையவில்லை என்று பயணிகள் ஆதங்கப்பட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications