என் ராத்தூக்கம் போச்சு.. தூக்கத்தை தொலைத்த சென்னையன்ஸ்! தமிழகத்துக்கு மிகப் பெரிய பாதிப்பு! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகரித்து வரும் மக்கள் தொகை, இயற்கை வளங்கள் அழிப்பு, பெருகிய வாகனங்கள் என பல்வேறு காரணிகளால் உலகம் முழுவதும் பருநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. எல்-நினோ போன்றவற்றின் காரணமாக உலக அளவில் வெப்பநிலை தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை மாற்றங்களோடு மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிப்பதால் போதிய அளவு தூக்கத்தை பெற முடியாமல் மக்கள் தவித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக உலக அளவில் சென்னையில் மக்கள் அதிக நேரம் தூக்கம் இல்லாமல் தவிப்பதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.

உலக அளவில் காலநிலை குறித்த ஆய்வுகளை கிளைமேட் சென்ட்ரல் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பு உலகம் முழுவதும் சுமார் 1300க்கும் மேற்பட்ட நகரங்களில் எடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதில் 1970 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெப்பமான இரவுகள் காரணமாக மக்கள் தூக்கத்தை இழப்பது இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக சொல்கிறது. இந்த ஆய்வின் முக்கிய அம்சம் பகல் நேர வெப்பத்தை விட இரவு நேர வெப்பம் தான் மக்களின் தூக்கத்தை அதிகமாக கெடுக்கிறது என சொல்கிறது.

Climate Change Heat Global Warming

உடலின் இயல்பான வெப்பநிலை குறைந்தால் தான் ஆழ்ந்த தூக்கம் வரும். ஆனால் இரவிலும் அதிக வெப்பம் அதிக இருப்பதும் இருப்பதால் உடல் குளிர்ச்சி அடையாமல் தூக்கத்தின் தரமும், தூங்கும் நேரமும் பாதிக்கப்படுகிறது என்ற ஆய்வு முடிவுகளை சொல்கிறது. இந்த பட்டியலில் அதிர்ச்சி தரும் விதமாக இந்தியா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இடம் பெற்றிருக்கிறது.

இந்தியாவின் பல நகரங்களில் ஆண்டுதோறும் மக்கள் 78 முதல் 91 மணி நேரம் வரை வெப்பமான இரவுகள் காரணமாக தூக்கத்தை இழந்திருக்கின்றனர். இதில் பருவநிலை மாற்றம் காரணமாக மட்டும் கூடுதலாக 8 முதல் 9 மணி நேரம் வரை தூக்க இழப்பு ஏற்படுகிறது என்கிறது. அதிலும் அதிர்ச்சி தரும் விதமாக தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் சராசரியாக 93 மணி நேரம் வரை தூக்கத்தை இழந்துள்ளனர். இதில் பருவநிலை மாற்றம் காரணமாக சுமார் 7 மணி நேரம் கூடுதலாக தூக்கம் பாதிக்கப்படுவது என்ற அதிர்ச்சி தகவலோடு இந்தியாவிலேயே இது மிக அதிகம் என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமான பெரு நகரங்களில் மோசமான தூக்கத்தை தொலைக்கும் நகரமாக சென்னை இருக்கிறது.

ஆண்டுக்கு சராசரியாக 93 மணி நேரம் வரை வெப்பமான இரவுகள் காரணமாக சென்னைவாசிகள் தூக்கத்தை இழந்து தூக்கமற்ற பெருநகரம் என்ற நிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, புனே உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளது.

இது மட்டுமில்லாமல் நெல்லூர், திருச்சி, கொச்சி, கோழிக்கோடு, குண்டூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களிலும் வெப்பமான இரவுகளால் மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். ஊட்டி, ஸ்ரீநகர் உள்ளிட்ட மலை நகரங்களில் தூக்க இழப்பு மிக குறைவாக உள்ளது. மாநில அளவிலும் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

உலக அளவிலும் இந்த பிரச்சனை நிறைய பேருக்கு இருப்பதாக இந்த ஆய்வு முடிவு சொல்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு நபரும் சராசரியாக ஆண்டுக்கு 56 மணி நேரம் வெப்பமான இரவுகள் காரணமாக தங்கள் தூக்கத்தை தொலைத்து இருக்கிறார்கள். இதில்10 சதவீத பாதிப்புக்கு பருவநிலை மாற்றமே நேரடி காரணமாக இருக்கிறது.

மேற்காசியா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், தென்கிழக்கு ஆசியாவும் மேற்கு ஆப்பிரிக்காவும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இரவு நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் போது உடலின் இயல்பான வெப்ப ஒழுங்குமுறை பாதிக்கப்படுகிறது. இதனால் ஆழ்ந்த தூக்கம் குறைவதோடு அடிக்கடி விழித்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. இதன் விளைவாக நினைவாற்றல் இழப்பு, மன அழுத்தம், உற்பத்தி திறன் சரிவு, நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் உருவாகும் அபாயம் உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள நகரங்களில் உருவாகும் நகர்புற வெப்பத் தீவு விளைவு இந்த பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. கான்கிரீட் கட்டிடங்கள், குறைந்து வரும் காடுகள், அதிக வாகனங்கள், காற்றோட்டம் குறைவு போன்ற காரணங்களால் நகரங்கள் இரவிலும் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்கின்றன. இதனால் வயதானவர்கள், பெண்கள், ஏசி வசதி இல்லாத குடும்பங்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

பருவநிலை மாற்றம் இதே வேகத்தில் தொடர்ந்தால் எதிர்காலத்தில் வெப்பமான இரவுகள் மேலும் அதிகரிக்கலாம். இதனால் பலரும் தூக்கத்தை தொலைத்து இது உலக அளவில் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறும் என எச்சரிக்கும் ஆய்வாளர்கள், இது உடல் நலம், மனநலம் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+