சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்.. அதிர்ச்சி தரும் பாதிப்பு லிஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5626 பேருக்கும் தண்டையார் பேட்டையில் 4549 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஜூன் 18ம் தேதி காலை நிலவரப்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. சென்னையில் 17ம் தேதி மாலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு 35556 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19027 பேர் குணம் அடைந்துள்ளனர்.

16067 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதாவது 45 சதவீதம் பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கொரோனா லாக்டவுன் 6.0 : சென்னைவாசிகளே அவசியம் இல்லாமல் வெளியே வராதீங்க - காவல்துறை கொரோனா லாக்டவுன் 6.0 : சென்னைவாசிகளே அவசியம் இல்லாமல் வெளியே வராதீங்க - காவல்துறை

 ராயபுரம் அதிகம்

ராயபுரம் அதிகம்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 5626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4549 பேரும், கோடம்பாக்கத்தில் 3801 ஆகவும், தேனாம்பேட்டையில் 4334 ஆகவும், அண்ணா நகரில் 3636 பேருக்கும், திருவிக நகரில் 3160 ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. அடையாறில் 2069 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1497 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறப்பு விதிகம் 1 சதவீதம்

இறப்பு விதிகம் 1 சதவீதம்

17.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 54% பேர் (19,027) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது. இதுவரை சென்னையில் 461 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஜூன் 18ம் தேதி காலை நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.திருவெற்றியூர்: 1324

  • மணலி: 503
  • மாதவரம் 955
  • தண்டையார் பேட்டை 4529
  • இராயபுரம் 5626
  • திருவிக நகர் 3160
  • அம்பத்தூர் 1243
  • அண்ணா நகர் 3636
  • தேனாம்பேட்டை 4334
  • கோடம்பாக்கம் 3801
  • வளசரவாக்கம் 1497
  • ஆலந்தூர் 736
  • அடையாறு 2069
  • பெருங்குடி 684
  • சோழிங்கநல்லூர் 677
  • மற்ற மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 762

எங்கு என்ன பாதிப்பு

எங்கு என்ன பாதிப்பு

சென்னையில் அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 3354 பேர் குணம் அடைந்துள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்புடன் அங்கு 2189 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அதற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டையில் 2257 பேர் குணம் அடைந்துள்ளனர். ஆனால் இராபுரத்தை விடஅதிகமாக 2229 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனாம்பேட்டையில் 2108 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 2162 பேர் மருத்துவமனையில் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். அண்ணாநகரில் 1764 பேர் குணம் அடைந்துவிட்ட நிலையில் 1827 பேர் நோய் பாதிப்புடன் கிசிச்சை பெறுகிறார்கள். கோடம்பாக்கத்தில் 2218 பேர் குணம் அடைந்துவிட்ட நிலையில், 1548 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். சென்னையிலேயே அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 83 பேரும், தேனாம்பேட்டையில் 64 பேரும், தண்டடையார் பேட்டையில் 63 பேரும், அண்ணாநகரில் 45 பேரும், கோடம்பக்கத்தில் 35 பேரும் உயரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சென்னையில் 461 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அண்மைக்காலமாகவே அதிகரித்து வருகிறது.

English summary
Here's the zone wise breakup of Covid-19 positive cases , Overall zone-wise detailed status of COVID-19 cases in chennai at june 18
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X