Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அசோக் நகர் கலையரசன் வழக்கு.. மனைவி தமிழரசி நீதிமன்றத்தில் சரண்.. மாமியாரை தேடும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அசோக்நகர் 7-வது அவென்யூவை சேர்ந்த கலையரசன் என்பவர் தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஒன்றரை ஆண்டாக கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நடுரோட்டில் வைத்து தமிழரசியின் தம்பிகள், கலையரசனை தீர்த்துக்கட்டினார்கள். இதன் பின்னணியை போலீசார் விசாரித்த போது மொத்த குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கலையரசனின் மனைவி தமிழரசி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரது மாமியாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பேசி தீர்க்கப்படாமல் சண்டைகளால் தீர்க்கவே முடியாத அளவுக்கு மாறுகிறது. கணவன் மனைவி பிரச்சனை இருகுடும்ப பிரச்சனையாக மாறி கடைசியில் எல்லாருமே நிம்மதி இல்லாத நிலைக்கு போகிறார்கள். அப்படித்தான் சென்னை அசோக் நகரில் சம்பவம் நடந்துள்ளது.

Chennai s Ashok Nagar Kalaiyarasan s wife surrenders in court Police searching for mother-in-law

காதல் திருமணம்

சென்னை அசோக்நகர் 7-வது அவென்யூவை சேர்ந்த 23 வயதாகும் கலையரசன் என்பவரும், அதே அசோக்நகர் புதூர் 13-வது தெருவை சேர்ந்த தமிழரசி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணம் செய்தார்கள். இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்துள்ளது. 3 வயதில் குழந்தையும் இருக்கிறார்.

கருத்து வேறுபாடு

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களின் இரு குடும்பத்திற்கும் கருத்து வேறுபாடு காரணமாக பகை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலையரசன் கடந்த ஆண்டு தமிழரசியின் சகோதரரான 20 வயதாகும் சக்திவேலை தாக்கியுள்ளார். இதனால் கலையரசனை பழி தீர்க்க மற்றொரு சகோதரர் சஞ்சய் (18) திட்டம் போட்டாராம். இதற்கிடையே காயமடைந்த சக்திவேல் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளார்.

கலையரசனுக்கு ஸ்கெட்ச்

இந்த நிலையில் கடந்த ஜூன் 15-ந்தேதி அன்று அசோக்நகர் புதூர் 8-வது தெரு வழியாக கலையசரன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சஞ்சய், சக்திவேல் மற்றும் அவரது நண்பர் சுனில்குமார் (20) ஆகிய 3 பேரும் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கலையரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

குடும்பமே சேர்ந்து சம்பவம்

இந்த சம்பவம் குறித்து அசோக்நகர் போலீசார் கொலைமுயற்சி வழக்கின் கீழ் சஞ்சய், சக்திவேல், சுனில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் உயிரிழந்தார். இதையடுத்து கைதான 3 பேர் மீது கொலைவழக்கு பாய்ந்தது. இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட கலையரசனின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் இந்த படுகொலைக்கு பின்னணியில் தமிழரசியும், அவரது நண்பர் சரவணன் என்பவரும் மற்றும் தமிழரசியின் குடும்பத்தினரும் செயல்பட்டதாக அசோக்நகர் போலீசில் கலையரசனின் குடும்பத்தார் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாகவும் அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மனைவி தமிழரசி சரண்

போலீஸ் விசாரணையில் கலையரசன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டி பின்னணியில் இருந்து செயல்பட்டது தமிழரசியும், அவரது நண்பர் சரவணனும் இருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்த போது தலைமறைவாகி விட்டனர். இந்தநிலையில் தமிழரசி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடந்தது.

மாமியாருக்கு வலை

அவரது தாயார் சந்தியா (65) என்பவரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதாக கருதப்படுவதால், அவரையும் போலீசார் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் சஞ்சய் என்ற இன்னொரு உறவினரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அசோக்நகரை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+