என்னது தோனியா? சேத்தன் சர்மா ஸ்டிங் ஆபரேஷன்.. திடீரென அடிபட்ட "தல" பெயர்.. ஆஹா சான்ஸ் இருக்கா?
சேத்தன் சர்மா எப்படியும் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ பெரிய சர்ச்சையாகி உள்ள நிலையில், அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். முக்கியமாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தோனியை இந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.
இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ இந்திய கிரிக்கெட் உலகை உலுக்கி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலகிலேயே நம்பர் 1 அணியாக இருந்தாலும் தற்போது இந்த வீடியோ மூலம் நீக்க முடியாத மிகப்பெரிய கறை ஏற்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி ஆடிக்கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் இந்திய வீரர்களுக்கு கவனத்தை திசை திருப்பும் விதமாக இந்த ஸ்டிங் ஆபரேஷன் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

கிரிக்கெட்
முக்கியமாக அவர் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குறித்து வெளியிட்ட சில தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிக்க கூடியவையாக உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்களை ஜீ நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புலனாய்வு செய்தி மூலம் வெளியிட்டு உள்ளது. இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவிடம் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் சர்மா குறிப்பிட்ட சில விஷயங்கள் பின்வருமாறு, விராட் கோலி கேப்டன்சியில் இருந்து நீக்கியதில் கங்குலிக்கு பங்கு இருப்பதாக கோலி நினைக்கிறார். ஆனால் பிசிசிஐ கூட்டத்தில் 9 பேர் இருந்தனர். அப்போது கங்குலி.. கோலியை கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம்.., ஒரு முறை யோசித்து பாருங்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால் அதை கோலி காதில் வாங்காமல் போய் இருக்கலாம்.

கிரிக்கெட்
மொத்தம் 9 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டதால் கோலி அதை காதில் வாங்காமல் போய் இருக்கலாம் என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய அணியில் சில கிரிக்கெட் வீரர்கள் பிட்டாக இல்லை. அவர்கள் ஊசி போடுகிறார்கள். இவர்கள் வெறும் 80 சதவிகிதம் உடல் தகுதியோடு இருக்கும் போதே ஊசி போடுகிறார்கள். அவர்கள் வெறுமனே ஊசி போட்டுவிட்டு விளையாட தொடங்கி உள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் பெயின் கில்லர்கள் எடுப்பது இல்லை. அவர்கள் பெயின் கில்லர் எடுத்து இருந்தால் அது ஊக்க மருந்து போல ஆகிவிடும்.

சீக்ரெட்
இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இடையே மோதல்கள் இல்லை. ஆனால் அவர்களுக்கு இடையில் ஈகோ இருக்கிறது. இரண்டு வீரர்களுமே பெரிய வீரர்கள். அதனால் இவர்களுக்கு ஈகோ உள்ளது. அவர்கள் இருவருமே பெரிய ஸ்டார்கள் போல.அமிதாப் பச்சன், தர்மேந்திரா இடையே ஈகோ இருந்தது போல இவர்கள் இடையே ஈகோ இருந்தது. கங்குலி ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக எல்லாம் செயல்படவில்லை. ஆனால் அவர் கோலியை விரும்பவில்லை. கோலியை கங்குலி எப்போதுமே விரும்பியது இல்லை, என்றெல்லாம் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

நீக்கம்
இவரின் இந்த பேச்சை தொடர்ந்து சேத்தன் சர்மா எப்படியும் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரமே பிசிசிஐ இவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்று பிசிசிஐ பொருளாளர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அவர் சேத்தன் சர்மா மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேச உள்ளார். இந்த நிலையில்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தோனியை இந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர். நேற்றில் இருந்தே இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் தோனி பெயரை குறிப்பிட தொடங்கி உள்ளனர்.

தேர்வுக்குழு
இந்திய அணியின் தேர்வுக்குழுவில் தோனியை கொண்டு வர வேண்டும். அவர் இருந்த வரை இந்திய அணி சிறப்பாக இருந்தது. ஆனால் அவருக்கு பின்பாக இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை. இதனால் தோனியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கன்னேரியா அளித்த பேட்டியில், பிசிசிஐ தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை உடனே துடைக்க வேண்டும். உடனே தற்போது உள்ள தேர்வுக்குழுவை கலைக்க வேண்டும்.

தேர்வுக்குழு தோனி
புதிதாக தேர்வுக்குழுவை உருவாக்க வேண்டும். அந்த குழுவில் தோனியை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார். தோனி வந்தால் எல்லாம் சரியாகிவிடும், தேர்வுக்குழு சரியாக செயல்பட தொடங்கிவிடும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் சிஎஸ்கே வட்டாரங்களில் விசாரித்ததில், இது பெரும்பாலும் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும். அதனால் தோனி இந்த தொடரில் ஆடுவார். அவர் தேர்வுக்குழு மீது விருப்பம் காட்டியது இல்லை. தெரிவுக்குழுவில் தோனி இடம்பெற்றால் அவர் சிஎஸ்கே உடனான தொடர்புகளை முற்றிலுமாக நீக்க வேண்டும். அதாவது அடுத்த வருடம் தேர்வுக்குழுவிற்கு போனால் கூட அவரால் அடுத்த வருடம் சிஎஸ்கேவிற்கு ஆலோசகராக கூட இருக்க முடியாது. தோனி அந்த முடிவை எடுக்க வாய்ப்பு இல்லை. எனவே அவர் தேர்வுக்குழுவிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பே இல்லை, என்று தெரிவிக்கின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications