Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகள்களுடன் கோர்ட் வந்த தலைமை நீதிபதி.. திகைத்து பார்த்த வழக்கறிஞர்கள்.. அழைத்து வந்தது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இன்று காலை உச்ச நீதிமன்றத்திற்கு தனது இரு வளர்ப்பு மகள்களையும் அழைத்து வந்தார். திடீரென தனது மகள்களை தலைமை நீதிபதி அழைத்து வந்ததை மூத்த நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் திகைப்புடன் பார்த்தனர்.

மகள்களுக்கு நீதிமன்ற அறையை சுற்றிக் காட்டுவதற்காக தலைமை நீதிபதி அழைத்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

நீதிமன்ற வளாகத்திற்கு காலை 10 மணியளவில் தனது மகள்களுடன் வருகை தந்த டி ஒய் சந்திரசூட், நீதிமன்ற அறைக்குள் வந்தார்.

மகள்களுடன் வந்த நீதிபதி

மகள்களுடன் வந்த நீதிபதி

டெல்லி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் இன்று தனது இரு வளர்ப்பு மகள்களான மகி (வயது 16) மற்றும் பிரியங்கா (வயது 20) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு நீதிமன்றம் வருகை தந்தார். முதல் முறையாக தனது மகள்களை அழைத்துக்கொண்டு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் வருகை தந்ததை பார்த்து நீதிமன்றத்தில் இருந்த மூத்த நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் திகைப்புடன் பார்த்தனர். நீதிமன்ற வளாகத்திற்கு காலை 10 மணியளவில் தனது மகள்களுடன் வருகை தந்த டி ஒய் சந்திரசூட், நீதிமன்ற அறைக்குள் வந்தார்.

அலுவலகத்தை சுற்றிக்காட்டினார்

அலுவலகத்தை சுற்றிக்காட்டினார்

பின்னர் நீதிமன்றத்தின் அறை எண் 1-ஐ மகள்களுக்கு காட்டிய தலைமை நீதிபதி நீதிமன்றம் செயல்பாடுகள் குறித்து எடுத்து விளக்கினார். நீதிபதிகள் இருக்கும் சேம்பர், வழக்கறிஞர்கள் வாதங்கள் முன்வைக்கும் இடம் உள்ளிட்டவற்றையும் தனது இருமகள்களுக்கும் தெளிவாக தலைமை நீதிபதி எடுத்துக் கூறினார். பிறகு தனது சேம்பருக்கு மகள்களை அழைத்துச் சென்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தனது அலுவலகத்தையும் சுற்றிக்காட்டினார். வழக்கமாக குடும்ப உறுப்பினர்களை அழைத்து வராத தலைமை நீதிபதி சந்திரசூட் தனது மகளுடன் வந்தது நீதிமன்றத்தில் கவனம் பெறும் வகையில் அமைந்தது.

இரு மகள்களும் ஆசைப்பட்டதால்

இரு மகள்களும் ஆசைப்பட்டதால்

உச்ச நீதிமன்றத்தை பார்க்க வேண்டும் என்று தனது இரு மகள்களும் ஆசைப்பட்டதால் மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தலைமை நீதிபதி அழைத்து வந்ததாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி டி ஒய் சந்திரசூட் பதவியேற்றார். நீதிபதி டிஒய் சந்திரசூட்டின் தந்தையும் தலைமை நீதிபதியாக இருந்தவர்தான்.

சந்திரசூட்டின் தந்தை

சந்திரசூட்டின் தந்தை

கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட்டின் தந்தையான ஒய்.வி சந்திரசூட் பதவி வகித்தார். நாட்டில் நீண்ட காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் இவரே ஆவார். கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி ஒய் சந்திரசூட், 2013 ஆம் ஆண்டு அலகாபாத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

 சபரிமலை கோவில் வழக்கு

சபரிமலை கோவில் வழக்கு

ராமர்கோவில் வழக்கு, சபரிமலை கோவில் வழக்குகள் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த அரசியல் சாசன அமர்வுகளில் நீதிபதி சந்திரசூட்டும் இடம் பெற்றிருந்தார். அதேபோல், ஓரின சேர்க்கை குற்றம் அல்ல என்று சட்டப்பிரிவு 377- ஐ ரத்து செய்து தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விலும் சந்திரசூட் இடம் பெற்றிருந்தார். வரும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகிப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+