முதல்வர் மு.க ஸ்டாலின் சிறந்த மனிதர்.. தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது.. ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிறந்த மனிதர் என்றும் தனிப்பட்ட முறையில் அவர் மீது மரியாதை வைத்திருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில செய்தி தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் உள்ளது. குறிப்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வருவது கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.

அதேபோல், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மரப்புப்படி தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றினார். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி,தமிழக அரசின் உரைகளில் சில பத்திகளை வாசிக்காமல் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் விட்ட பத்திகளும் இடம் பெறும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்ட சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதேபோல், தமிழக பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை இணைத்து, பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், இதேபோன்ற தீர்மானத்தை அந்தந்த மாநில சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் நிலவி வரும் நிலையில், ஆங்கில செய்தி தாள் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக முதல்வர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் கூறுகையில், " முதல்வர் மு.க ஸ்டாலின் சிறந்த மனிதர்.. அவர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications