ஸ்டாலின் துவங்கிய ஆட்டம்.. பின்னணியில் பாஜக? ஒன்று சேர போறாங்களா? அடுத்த அணுகுண்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியலும் இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. நேற்றுவரை தோழமையாக இருந்த காங்கிரஸ் கட்சி செய்த திடீர் துரோகத்தால், அறிவாலயத் தரப்பு உச்சக்கட்ட கடுப்பில் ஆழ்ந்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திமுகவும் நாங்களும் ஒரே குடும்பம் என்று நேற்று வரை மேடைகளில் உருகிய காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் என ஒட்டுமொத்த தோழமைக் கட்சிகளும், 108 இடங்களைப் பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தவெக பக்கம் வரிசையாக தஞ்சம் புகுந்துவிட்டன.

Stalin

திமுக காங்கிரஸ் கூட்டணி

இதில், திமுகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது காங்கிரஸ் கட்சியின் திடீர் பல்டிதான். திமுக தயவில் எம்பி பதவிகளை அனுபவித்துவிட்டு, இப்போது தவெக தயவில் ஒரு எம்பி சீட்டையும், அமைச்சரவையில் ஒரு இடத்தையும் லபக்கென வாங்கி கொண்டு முதல் ஆளாக தவெக கூட்டணிக்கு தாவியது காங்கிரஸ்.

திமுக தலைமையிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கொள்ளாமல், அரசியல் நாகரீகமே இல்லாமல் காங்கிரஸ் செய்த இந்த காரியம், அறிவாலயத் தரப்பை உச்சக்கட்ட கடுப்பிற்கு உள்ளாக்கியிருந்தது.

இந்த அரசியல் துரோகத்திற்கு டெல்லியிலேயே வைத்து தக்க பதிலடி கொடுக்கக் காத்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது தனது அதிரடி ஆட்டத்தைத் துவங்கியுள்ளார்.

இந்தியா கூட்டணி கூட்டம்

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜூன் 8ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், "காங்கிரஸ் பங்கேற்கும் இந்த கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறோம்" என திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தன் அறிக்கையில் மிக ஓப்பனாகவே உடைத்துப் பேசியுள்ளது.

ஸ்டாலின் துவங்கிய ஆட்டம்

அதேநேரம், இந்தியா கூட்டணி உருவானது முதல் அதன் மையச் சக்தியாகவும், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், மாநில உரிமைகளுக்கு எதிரான விஷயங்களில் முதல் இயக்கமாக நின்று எதிர்த்தது திமுகதான் என்பதையும் டெல்லிக்கு அழுத்தமாக நினைவூட்டியுள்ளது.

காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்தாலும், கூட்டணியில் உள்ள மற்ற தோழமை கட்சிகள் முன்வைக்கும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு திமுகவின் குரல் என்றென்றும் ஒலிக்கும் என அறிவித்ததன் மூலம், தங்களின் கோபம் காங்கிரஸ் மீது மட்டுமே தவிர, தேசிய அளவிலான பாசிச எதிர்ப்பு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை முதிர்ச்சியான அரசியல் நகர்வாக ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

துரோகி என விமர்சித்த திமுக

காங்கிரஸை துரோகி என திமுக பகிரங்கமாக விமர்சித்து இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணித்திருப்பது வெளிப்பார்வைக்கு காங்கிரஸ் மீதான கோபமாக தெரிந்தாலும், அறிவாலயத்தின் இந்த அதிரடி முடிவுக்கு பின்னணியில் கமலாலயம் இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளன.

மத்தியில் "காங்கிரஸ் இல்லாத பாரதம்" என்ற ஒற்றை இலக்கோடு களம் காணும் பாஜக, தற்போது இந்தியா கூட்டணி அடுத்தடுத்து துண்டு துண்டாக சிதறிப் போவதை மிக ரகசியமாக ரசித்து வருகிறது. இந்தியா கூட்டணியின் வலுவை உடைக்க திமுக எடுத்திருக்கும் இந்த முடிவு, பாஜவுக்கு சாதகமாகவே முடியும் என்பதால் அரசியல் களம் இந்த நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இன்னொருபக்கம், தேசிய அளவில் காங்கிரஸ் தலைமைக்கு மாற்று சக்தியாக ஒரு புதிய அச்சு உருவாகி வருவதாகவும் டெல்லி தகவல்கள் கசிகின்றன.

பின்னணியில் பாஜக?

ஏற்கனவே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குவதை முற்றிலுமாக விரும்பவில்லை. இப்போது திமுகவும் இந்த அதிருப்தி பட்டியலில் இணைந்திருப்பதால், காங்கிரஸை கழற்றிவிட்டு சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திமுக ஆகிய கட்சிகள் இணைந்து மம்தா பானர்ஜி தலைமையில் 3வது அணி போன்ற ஒரு புதிய தேசிய கூட்டணியை உருவாக்க கூடும் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

இதனிடையே திமுகவை தன்பக்கம் வளைத்துப் போடும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் ஒரு புதிய தகவல் தீயாய் பரவி வருகிறது. வரவிருக்கும் தொகுதி மறுவரையறை திட்டம் உள்ளிட்ட மிக முக்கிய மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக எம்பிக்களின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு கைமாறாக மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு இடமளிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் டெல்லி வட்டாரங்களில் செய்திகள் உலா வருகின்றன.

பாஜக - திமுக

இதில் ஒரு தரப்பினர், திமுக எந்த பக்கமும் சாயாமல் நடுநிலை வகிக்கும் என்று சொன்னாலும், மற்றொரு தரப்பினரோ காங்கிரஸின் துரோகத்துக்கு பழிவாங்க திமுக பாஜகவுடன் கைகோர்க்கவும் வாய்ப்புள்ளது என கணித்து வருகின்றனர்.

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவுடன் சேர்ந்து திமுக ஆட்சி அமைக்க திட்டமிடுவதாக எழுந்த புகார்கள் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருந்தன. இப்போது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீட் தேர்வு மோசடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற முக்கிய வாழ்வாதார பிரச்சனைகளில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்பைப்போல பாஜகவை மிகக் கடுமையாக விமர்சிக்காமல் ஒருவித மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதையும், எளிதாக கடந்து செல்ல முடியாது,

சாப்ட் கார்னர் போக்கு சாத்தியமா

இந்த சாப்ட் கார்னர் போக்கு பாஜகவுடனான கூட்டணிக்கு போடப்படும் அச்சாரமா? அல்லது திமுக வழக்கம் போல பாஜகவை எதிர்த்து தனித்து நிற்குமா? அல்லது புதிய அரசியல் கணக்குகளுக்காக கைகோர்க்குமா என்றெல்லாம் தெரியவில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட அரசியல் நகர்வுகள் கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும், எதார்த்த சூழலில் இவை சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே தோன்றுகிறது. கொள்கை ரீதியாக பாசிசத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் திமுக, வெறும் தேர்தல் கால தற்காலிக அதிருப்திக்காகத் தன் நீண்டகால மதச்சார்பற்ற கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, பாஜகவுடன் கைகோர்க்கும் என்பது தற்கொலைக்குச் சமமான முடிவாகவே முடியும், காரணம், இது அக்கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கியை மொத்தமாக சிதைத்துவிடும்.

இந்தியா கூட்டணி புறக்கணிப்பு

அதேபோல, மம்தா பானர்ஜி தலைமையில் காங்கிரஸ் இல்லாத புதிய தேசிய கூட்டணி என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய தற்காலிக அழுத்த தந்திரமாகவோ அல்லது காங்கிரஸை வழிக்குக் கொண்டுவரும் வியூகமாகவோ இருக்கலாமே தவிர, நடைமுறையில் காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய கட்சியின் பலம் இல்லாமல் மத்தியில் மாற்று அரசை உருவாக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

அதனால் திமுகவின் தற்போதைய இந்தியா கூட்டணி புறக்கணிப்பு என்பது, தங்களுக்குத் துரோகம் இழைத்த காங்கிரஸ் தலைமைக்குத் தங்களின் கோபத்தையும், கூட்டணியில் தங்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதற்காக ஸ்டாலின் எடுத்த தற்காலிக "ராஜதந்திர ரீதியிலான எச்சரிக்கை" நகர்வு மட்டுமே தவிர, கொள்கை மாற்றத்திற்கான அறிகுறி அல்ல என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+