எடப்பாடி பழனிச்சாமி வைத்த கோரிக்கை.. உடனே நிறைவேற்றுவதாக அறிவித்த ஸ்டாலின்.. மகிழ்ந்த அதிமுக தரப்பு
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று மின்சார வினியோகம் தொடர்பாக வைத்த ஒரு கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை வைத்ததும், உடனடியாக அதை நிறைவேற்றி வைப்பதாக உடனடியாக, முதல்வர் உறுதி அளிப்பது சட்டசபையில் எப்போதாவது நிகழக்கூடிய நிகழ்வுதான். அப்படியான ஒரு காட்சிக்கு என்று சாட்சியாகி இருக்கிறது தமிழக சட்டசபை.
எதிர்க்கட்சி தலைவர் பொதுவாக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது வழக்கம்.

குறைகளை திருத்துவதாக அறிவிப்பு
முதலமைச்சர் அந்த விமர்சனங்களை மறுத்துப் பேசுவது அடிக்கடி நிகழக் கூடியதாகும். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்ட நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய ஒரு கோரிக்கையை கேட்டு, குறைகள் இருந்தால் அதை திருத்திக் கொள்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலளித்துள்ளார்.

மின்சாரம் வழங்கும் நேரம் குறைப்பு
அதாவது மேச்சேரி மற்றும் ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான மின்சாரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனமாக இருந்தது. வழங்கப்படும் மின்சாரம் அளவு குறைந்தால், குடி தண்ணீர் சப்ளை விஷயத்தில் அது பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது, எடப்பாடி பழனிசாமி பேச்சின் சாராம்சமாக இருந்தது.

ஸ்டாலின் பதில்
இந்த விமர்சனத்தையையும், கோரிக்கையையும் கேட்டதும், உடனடியாக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அவர் எழுந்து பேசும் போது, எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தது உண்மை என்றால், உடனடியாக இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிபட தெரிவிக்கும் வகையில், பதிலளித்தார் ஸ்டாலின்.

அதிமுகவினரும் வரவேற்பு
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு உடனடியாக முதல்வர் பதில் அளித்ததோடு, அந்த பிரச்சனையை சரி செய்வதாகவும் தெரிவித்து இருப்பது அதிமுகவினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

மின்சார வினியோகம்
எடப்பாடி பழனிசாமி சொன்ன புகார் உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மின்சாரத்தால் எந்த பிரச்சினையும் வராது என்று பகுதி மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications