பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாடு.. விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்திருக்கிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள், அரசுத் துறைகள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்களுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படும்.
தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நல் ஆளுமைகள் விருது
நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளை அறிவித்திருந்தது. ஏற்கெனவே குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான போலீஸ் விருதுகள் மற்றும் குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான போலீஸ் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 27 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள், அரசுத் துறைகள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்களுக்கு நல் ஆளுமை விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

ஆட்சியர்களுக்கு விருது
அதன்படி, இதில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை மீட்டு தொழில் முனைவோராக மாற்றியதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், திருநங்கைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்த செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கும், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை சிறப்பாக உருவாக்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

காவல்துறையினருக்கு விருது
மேலும் நீர் நிலைகளை மீட்டு எடுத்த அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியா்களுக்கும், பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கும், வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலி வழியாக வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளருக்கும், சென்னையில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோரை மீட்டு பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளருக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டன.

வேலைவாய்ப்பு
விருது பெறுவோர்கள் ரூ.2 லட்சம் பரிசுத்தொகையையும் பெறுவார்கள். அதேபோல மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, சிறந்த மாவட்ட ஆட்சியர்களாக தினேஷ் பொன்ராஜ், அருண் தம்புராஜ் தேர்வாகி உள்ளனர். சிறந்த மருத்துவராக உதகையை சேர்ந்த ஜெய் கணேஷ் மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனமான புதுக்கோட்டையில் உள்ள ரெனோசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது.

அரசாணை
அதேபோல சிறந்த சமூகப் பணியாளராக மதுரையை சேர்ந்த அமுத சாந்தி தேர்வாகி உள்ளார். மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனம் என டாபே ஜெ ரிஹாப் சென்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக திண்டுக்கல் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்வாகி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கான விருது சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சரால் வழங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியருக்கான விருது மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது.

அப்துல் கலாம் விருது
மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் அப்துல் கலாம் விருது பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான முனைவர் ச.இஞ்ஞாசிமுத்துவுக்கும், குளத்தில் மூழ்கிய சிறார்களை காப்பாற்றியதற்காக நாகை மாவட்டத்தின் கீழ்வேளூரின் எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருதும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணியாற்றிய அமுத சாந்திக்கு சிறந்த சமூக பணியாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் உங்கள் தொகுதியில் முதல்வர் விருது லட்சுமி பிரியாவுக்கு வழங்கப்பட்டது.
மகளிர் நலத்திற்காக சிறந்த சேவைக்கு தொண்டாற்றிய வானவில் அறக்கட்டளைக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முதலமைச்சரின் இளைஞர் விருது, விஜயகுமார், முகமது ஆசிக் வேலூ ஸ்ரீகாந்த், நாகையை சேர்ந்த சிவாஞ்சனி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.