தளபதிகள் நேருக்கு நேர் சந்திப்பு... புன்னகையுடன் வணக்கம் - சமூக வலைத்தளங்களில் தெறி மாஸ்
அரசியல் தளபதியும் திரை உலக தளபதியும் நேருக்கு நேர் சந்தித்தது நெட்டிசன்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சென்னை: தளபதிகள் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் அந்த இடமே மாஸ்தான். சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலினும் நடிகர் விஜய்யும் நேருக்கு நேர் சந்தித்து புன்னகையுடன் வணக்கம் வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தெறி மாஸ் ஆக பரவி வருகிறது.
Recommended Video

ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி அகோரம் மகள் ஜஸ்வர்யா - பிரபல தொழில் அதிபரின் மகனுமான ராகுல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். தென் இந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர்கள் ஆர்.பி சௌத்திரி, ஏல்.அழகப்பன், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேலும் நடிகர் விஜய் சிவகார்த்திகேயன் சதீஷ் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

நேருக்கு நேர் வணக்கம்
நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிப்பதற்காக மேடைக்கு வந்த போது முதல்வர் மு க ஸ்டாலின் திருமண அரங்கிற்குள் வந்தார். மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து புன்னகையுடன் பரஸ்பரம் வணக்கம் வைத்துக்கொண்டனர். ஒரு நிமிடங்கள் சந்தித்து பரஸ்பரம் கை கொடுத்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலினும் கை குலுக்கி ஒருவரை ஒருவர் அன்போடு அணைத்துக்கொண்டனர்.

தளபதிகள் சந்திப்பு வரவேற்ற விஐபிக்கள்
நடிகர் விஜய் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் திருமண மண்டபத்தில் சந்தித்தபோது அங்கிருந்த அனைவரும் கைதட்டி வரவேற்றனர். பின்னர், முதல்வர் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பற்றனர்.

முதல்வர் ட்விட்டரில் பதிவு
சென்னையில் நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் திரு. கல்பாத்தி அகோரம் அவர்களின் மகள் ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் திரு. ராம் ரத்தன் ராய் அவர்களின் மகன் ராகுல் ராய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார் என முதல்வர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தளபதிகள் சந்திப்பால் தெறி மாஸ்
திருமண விழாவில் நடிகர் விஜய்யிடம் சிலர் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். புன்னகையுடன் வணக்கம் கூறியவாரே தனியார் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார் நடிகர் விஜய். முதல்வர் மு.க ஸ்டாலினை அவரது ஆதரவாளர்கள் தளபதி என்று பாசத்தோடு அழைப்பார்கள். அதே போல நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்றும் அழைக்கின்றனர். தளபதிகள் இரண்டு பேரும் நேருக்கு நேர் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தெறி மாஸ் ஆக பகிரப்படுகின்றனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications