மத்திய - மாநில உறவுகள் பற்றி பேச கேரளா செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின்...அனல் பறக்குமா
கேரளாவின் கண்ணூரில் நடந்துவரும் சி.பி.ஐ.எம் மாநாட்டில் நாளை நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று ‘மத்திய- மாநில உறவுகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற உள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். நாளை நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று 'மத்திய- மாநில உறவுகள்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை, கண்ணூரில் நடத்தப்படுகிறது. துரையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில கிளையின் 23 வது மாநில மாநாடு நடந்து முடிந்ததையொட்டி, கேரள மாநிலத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறது
கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ஆளுநர்களை கொண்டு, பாஜக அல்லாத மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து ஏதாவதொரு குடைச்சல் அளித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில், மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் மாநில சுயாட்சி மாநாட்டை நாளைய தினம் நடத்த கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை கேரள அரசின் சார்பில் அந்த மாநில அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கேரளா அமைச்சர் அழைப்பு
இந்த வரிசையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்தில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் கடந்த 3ஆம் தேதி சந்தித்தார். அப்போது அவர், மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து மாநாட்டில் பங்கேற்க செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். நாளை காலை கண்ணூர் செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின், நாளை இரவே சென்னை திரும்புகிறார்.

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா
முதல்வர் ஸ்டாலின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழா, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூல் வெளியீட்டு விழா கிட்டதட்ட மாநில சுயாட்சி மாநாடு போல் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில். தற்போது கேரள மாநில அரசு மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் முதல்வருக்கு மனு
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டை தமிழக முதல்வர் புறக்கணிக்க வேண்டும் என பெரியாறு - வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications