மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: தவெக ஆட்சி அமைந்த பின் தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்தடை குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. மின் தடைக்கு திமுகவினர் பியூஸ் கட்டையை திருடி செல்வதே காரணம் என்று தவெக கூறும் நிலையில், அதனை வைத்து சோசியல் மீடியாவில் மீம்ஸ் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

ரெளத்திரம் படத்தில் ஜீவாவிடம் சத்யன், "ஏன் சார் உங்க பேரு சொன்னிங்க.. தாம்பரம் என்னோட ஏரியா சார்.. இனிமே என்னோட்ட பேரையே யூஸ் பண்ணுங்க" என்பார். அதில் வரும் ஜீவாவை திமுகவாகவும், சத்யனை தவெகவாகவும் மாற்றி, திமுக எங்களுக்கு எதுவுமே பண்ணல என்று சொல்வதாகவும், அதற்கு ஜீவா, திமுகவின் சாதனைகளை சொல்வதாகவும், உடனடியாக சத்யன், என்னடா செஞ்சதை சொல்லி காட்றீங்களா.. இப்போ இதுக்கு நாங்க நன்றியோட இருக்கணுமா என்று கேட்பதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் முடியலைடா சாமி ரகம்.

அயன் படத்தில் சூர்யாவிடம் பொன்வண்ணன், ஆமா.. கேட்க மறந்துட்டேன்.. இந்த கமலேஷ் என்ன பண்றான் என்பார். அதில் வரும் சூர்யாவாக விஜய்யையும், பொன்வண்ணனாக மக்களையும் மாற்றி, ஆமா கேட்க மறந்துட்டேன்.. இந்த ரேஷன் கடையில.. ஆணுக்கு ஆண் எடையாளர்.. பெண்ணுக்கு பெண் எடையாளர் நியமனம் என்ன ஆச்சு என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ரகம்.

போக்கிரி படத்தில் தண்ணீர் லாரியை தடுக்கும் வடிவேலு, வயிற்றை வைத்து தண்ணீர் சிந்துவதை தடுக்க முயற்சிப்பார். அது கனக்ஷன் மாறிவிடும். உடனடியாக டிரைவர் பேக்கில் தலையை வைத்து முட்டுக் கொடுப்பார். அதுபோல் சென்னைல ஒரே கரண்ட் கட்டாம்ல என்று சொல்வதாகவும், அதற்கு வடிவேலு, 2006 - 2011 திமுக ஆட்சியில் இருந்த கரண்ட் கட்ட விட பரவால என்று முட்டுக் கொடுப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுங்கடா ரகம்.

சென்னையில் பியூஸ் கேரியர் மட்டும் காணாம போகுது என்று தவெகவினர் பேட்டி கொடுத்து வருகின்றனர். அதனை பரிதாபங்கள் கோபியாக திமுகவினரை மாற்றி, சென்னைல உள்ள பியூஸ் கேரியர் மட்டும் காணாம போகுதுன்னா சென்னைல மட்டும் தங்கத்துல செஞ்சிருப்பாங்களோ? என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.












Click it and Unblock the Notifications