முதல்வர் ஸ்டாலினுக்கு நடந்தது வழக்கமான மருத்துவ பரிசோதனை.. ராமசந்திரா மருத்துவமனை விளக்கம்
சென்னை: தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு இன்று நடந்தது வழக்கமான பரிசோதனை என்று சென்னை ராமசந்திரா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் இருந்து முதல்வர் கிளம்பிச் சென்றார்.
Recommended Video
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உடல் பரிசோதனைக்காக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இன்று காலை 7 மணிக்கு வந்துள்ளார்.

மருத்துவமனையில் உள்ள இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலத்திடம் தனது உடல் நலம் குறித்து பரிசோதனை செய்து கொண்டார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது
காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் சுமார் 9 மணி வரை மருத்துவமனையில் உடல் நிலை குறித்து பரிசோதனை மேற்கொண்டார் .முதல்வர் ஸ்டாலின் 2 மணி நேர பரிசோதனைக்கு பின்பு மருத்துவமனையிலிருந்து கிளம்பி சென்றார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ராமசந்திரா மருத்துவமனை, "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் சென்னை ராமசந்திரா மருத்துவமனைக்கு முதல்வர் அவர்கள் வந்தார்கள். முழு உடல் பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications