சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“இனி யாராவது கஞ்சா விற்றால் ..” உள்துறைக்கு அனுப்பியாச்சு - அதிரடியாக அறிவித்த ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை : கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை கஞ்சா தொடர்பாக 7,931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    CM Stalin Assembly Speech| காவல்துறையை கை நீட்டி குற்றம் சொல்லக்கூடாது

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியின் 60 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்? இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்?

    இந்த அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

    போதைப்பொருள் பயன்பாடு

    போதைப்பொருள் பயன்பாடு


    சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டதாகவும், பள்ளிகள், கல்லூரிகளின் அருகிலேயே போதைப் பொருட்கள் விற்பனை சாதாரணமாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

    அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், குட்கா, கஞ்சா பற்றி பேச அ.தி.மு.கவுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும், கடந்த ஆட்சியில் குட்கா விற்பனை பற்றி பேசி அதை சட்டசபைக்கு கொண்டுவந்து காட்டியதே நான் தான் என்றும் தெரிவித்தார்.

    கடுமையான தண்டனை

    கடுமையான தண்டனை

    இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் இதுதொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால், சமூகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் எதிர்கால சந்ததியினருக்கு நேரக்கூடிய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், இந்தப் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

     சொத்துக்கள் பறிமுதல்

    சொத்துக்கள் பறிமுதல்

    மேலும், இக்குற்றங்களில் ஈடுபடுவோர், அவர்களது கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க 256 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. உயர்கல்வித் துறையில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் "போதைத் தடுப்பு கிளப்" அமைக்க ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

     10 ஆண்டுகள் சிறை

    10 ஆண்டுகள் சிறை

    ஆட்சிப் பொறுப்பேற்றதும் சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, கல்வி நிறுவனங்கள் இருக்கக்கூடிய 200 மீட்டர் தொலைவிற்குள் போதைப் பொருட்கள் விற்பவர்களுக்கு 3 வருடம் முதல் 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடைச் சட்டம், 1985ல் உரிய திருத்தங்கள் செய்யத் தேவையான கருத்துருக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்மீது ஒப்புதல் பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    போதைப் பொருட்களை ஒழிப்போம்

    போதைப் பொருட்களை ஒழிப்போம்

    மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை கஞ்சா தொடர்பாக 7,931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகன. கஞ்சா விற்ற தேனி மாவட்டம் ஓடப்பட்டி பூபாலன் உள்ளிட்ட 8 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியின் 60 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வரும் நாட்களில் எடுக்கும் என உறுதியளிப்பதாகத் தெரிவித்தார்.

    English summary
    Chief Minister MK Stalin promised that in assembly, more drastic measures to eradicate drugs including cannabis
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X