சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜேசிபியை வைத்து குழந்தைகளை மீட்க முடியாது.. அதி நவீன இயந்திரங்கள் தேவை.. கோபி நயினார்

குழந்தைகளை மீட்கநவீன இயந்திரங்கள் தேவை என கோபி நயினார் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Aram Director Slams: ராக்கெட் மீது கவனம் செலுத்திய நீங்கள்?

    சென்னை: ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க இதுவரை நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும் என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.

    இதேபோல போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் சம்பவம்தான் அறம் என்ற படத்தின் கதையாகும். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, பாராட்டப்பட்ட படம்தான் அறம். அதன் இயக்குநர் கோபி நயினார்.

    சுஜித் சம்பவம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இதுபோன்ற சம்பவங்களில் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க தற்போது நம்மிடம் போதிய உபகரணம், இயந்திரங்கள் இல்லை. ஜேசிபி இயந்திரத்தை வைத்து பக்கவாட்டில் பள்ளம் தோண்டுவது சரியான வழி அல்ல.

    விடிய விடிய குமுறலோடு காத்திருந்த சுஜித்தின் தாய்.. வேதனையில் மயங்கி விழுந்ததால் பரபரப்புவிடிய விடிய குமுறலோடு காத்திருந்த சுஜித்தின் தாய்.. வேதனையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

    அதி நவீன இயந்திரங்கள் தேவை

    அதி நவீன இயந்திரங்கள் தேவை

    இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்க அதி நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவற்றை தீயணைப்புத் துறையினரிடமும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரிடமும் கொடுக்க வேண்டும்.

    மக்களுக்கும் பயன்பட வேண்டும்

    மக்களுக்கும் பயன்பட வேண்டும்

    ராக்கெட் மீது நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். அதேசமயம், சாமானிய மக்களுக்கும் விஞ்ஞானம் பக்க பலமாக இருக்க வேண்டும், பயன்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கோபி நயினார்.

    போராடும் படையினர்

    போராடும் படையினர்

    கோபி நயினார் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. சுஜித்தை மீட்க கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக முயன்று வருகின்றனர் மீட்புப் படையினர். அதி நவீன இயந்திரம் கைவசம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். தனி நபர்கள் கண்டுபிடித்த சாதனங்களை வைத்துத்தான் முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    துரித கண்டுபிடிப்பு அவசியம்

    துரித கண்டுபிடிப்பு அவசியம்

    இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க ஐஐடி உள்ளிட்ட அனைத்து அறிவியல்ஆய்வு நிறுவனங்களும் கை கோர்த்து போர்க்கால அடிப்படையில் அதி நவீன இயந்திரங்களைக் கண்டுபிடித்து தமிழகம் முழுவதும் அதை விநியோகிக்க வேண்டும் என்பதே மக்களின் சாதாரண எதிர்பார்ப்பு.

    English summary
    sujith rescue operation: children cannot be rescued with JCP machines says aram film director gopi nainar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X