• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நைட்டியுடன் தூக்கில் தொங்கிய சித்ரா.. பேஸ்புக் பக்கம் திடீர் முடக்கம்.. அப்பா கொந்தளிப்பு.. புகார்!

|

சென்னை: நைட்டியுடன், தன் சேலையிலேயே தூக்கு மாட்டி தொங்கி உள்ளார் நடிகை சித்ரா. சித்ராவின் மரணம் குறித்த விசாரணை துரிதமாகி உள்ளது.. இதனிடையே ஒருபக்கம் சித்ராவின் ஃபேஸ்புக் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது.. மற்றொரு பக்கம் தன் மகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய என்ன காரணம் அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று சித்ராவின் அப்பா நசரத்பேட்டை போலீசில் புகார் தந்துள்ளார்.

இன்று விடிகாலை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்த விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.. அதேசமயம், சித்ராவின் மரணத்தில் பலவித சந்தேகங்களும், கேள்விகளும் பரவலாக எழுந்து வருகின்றன.

இரவு 2.30 மணிக்கு ஷூட்டிங் முடித்துவிட்டு ரூமுக்கு திரும்பிய சித்ரா, 3 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கதவு

கதவு

குளிப்பதற்கு முன்னதாக, ஹேமந்த்தை வெளியில் நிற்க சொல்லி உள்ளார். ரொம்ப நேரமாக கதவை தட்டியும் திறக்காததால்தான், ஓட்டல் நிர்வாகத்திடம் மாற்று சாவியை வாங்கி கொண்டு உள்ளே சென்று பார்த்ததாக ஹேமந்த் சொல்கிறார். கிட்டத்தட்ட 2 மணி நேரமாக சித்ரா கதவை திறக்கவில்லையாம். அப்படியானால், தற்கொலை உண்மையிலேயே எந்த நேரத்தில் நடந்தது என்பதே முதல் கேள்வியாக உள்ளது...

 2 காயங்கள்

2 காயங்கள்

கன்னத்தில் 2 இடங்களில் காயங்கள் உள்ளன.. ஒன்று வலது பக்க கன்னத்திலும், மற்றொன்று நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. சித்ரா நைட்டியில் உள்ளபோதுதான், ஒரு புடவையில் தூக்கு போட்டு கொண்டுள்ளார்.. தூக்கு போட்டுக் கொண்டதால், இந்த காயங்கள் ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.. அப்படியே இருந்தாலும் கன்னத்தில் புடவையால் காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால், இதுவும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

சித்ரா

சித்ரா

சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேமந்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேமந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்... தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை இருந்திருந்தால், ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருந்திருப்பாரா? அல்லது அப்படி ஒரு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருப்பாரா? போன்ற சந்தேகங்களும் எழுகின்றன.

 தைரியமான பெண்

தைரியமான பெண்

இது எல்லாவற்றிற்கும் மேலாக, சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை, மிகவும் தைரியமான துணிச்சலான பெண் என்கின்றனர் அவரை நன்கு அறிந்தவர்கள்.. எப்போதுமே கலகலவென்று பேசிக் கொண்டே இருப்பாராம்.. நேற்றுகூட நன்றாகத்தான் இருந்திருக்கிறார்.. பிரச்சனையில் இருந்தவர் போல தெரியவே இல்லை என்கிறார்கள்.

 முத்த காட்சி

முத்த காட்சி

சில தினங்களாகவே தன் அம்மாவுடன் கருத்து வேறுபாட்டில் சித்ரா இருந்துள்ளார்.. அதனாலேயே தனியாக வந்து ரூம் எடுத்து ஹேமந்துடன் தங்கி வந்துள்ளார்.. இந்த கருத்து வேறுபாடு எதற்காக என்று தெரியவில்லை.. மற்றொருபுறம், முத்த காட்சியில் நடிக்க நேர்ந்ததால்தான் தம்பதிக்குள் பிரச்சனை வெடித்தது என்று ஒரு தரப்பு சொல்கிறது.. முத்த காட்சியில் நடிப்பது என்பது இந்த காலத்தில் யதார்த்தமான ஒன்றாக இருக்கும்போது, இதற்குபோய் இந்த அளவுக்கு தகராறு வருமா என்பதும் கேள்வியே.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

ஒருவேளை சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது என்றாலும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மூலம்தான், சித்ரா மரணம் குறித்த அனைத்து உண்மையான, உறுதியான தகவலை தெரிந்து கொள்ள முடியும்... அதன்பிறகுதான், வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசாரும் எடுக்க முடியும்.

 ஃபேஸ்புக் பக்கம்

ஃபேஸ்புக் பக்கம்

இதனிடையே, சித்ராவின் ஃபேஸ்புக் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது.. இதன்காரணமாக, அவர் கடைசியாக பதிவிட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது.. ஆனால், இன்ஸ்டாகிராம் செயல்பாட்டில் உள்ளது.. அதில் சித்ரா வெளியிட்டிருக்கும் கடைசி போட்டோவை கண்டு ரசிகர்கள் கதறி அழுது வருகின்றனர்.. இதுவரை பதிவிட்ட போட்டோக்கள் முதல் கடைசியாக பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோ வரை எல்லாவற்றிலுமே சித்ரா சிரித்து கொண்டே இருக்கிறார்.. தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சக நடிகை சரண்யாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதை போஸ்ட் போட்டு, செல்ஃபி வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

 அப்பா காமராஜ்

அப்பா காமராஜ்

இதனிடையே தன் மகள் ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய என்ன காரணம் அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என சித்ராவின் அப்பா காமராஜ் நசரத்பேட்டை போலீசில் புகார் தந்துள்ளார்.. செய்தியாளர்களை சந்தித்து பேசிய காமராஜ், சாவில் சந்தேகம் இல்லை, ஆனால், இறப்புக்காண காரணம் கேட்டு புகாரளித்திருப்பதாக கூறியுள்ளார்.

 
 
 
English summary
Chitra Suicide and what are the reasons behind in case issue
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X