டெல்டாவின் "பெரிய தலை" திமுகவுக்கு வராரு! தென் தமிழகத்தில் கிறிஸ்துவ நாடார் ஓட்டு.. மாஸ்டர் ஸ்ட்ரோக்
சென்னை: நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமாய் இருந்த, மூத்த தலைவர் மனோஜ் பாண்டியன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.. தென்மாவட்டங்களில் கிறிஸ்துவ நாடார்கள் வாக்குகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார். அத்துடன் டெல்டாவில் இருந்து முக்கிய தலைவர், திமுகவுக்கு விரைவில் வர போவதாகவும் அந்த பேட்டியில் சொல்லி உள்ளார்.
Reflect Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் தமிழா தமிழா பண்டியன், "தென்மாவட்டத்தில் நாடார்கள் வாக்கு திமுகவுக்கு பலவீனமாக உள்ளது.. இதை சரிசெய்வதற்காக கிறித்துவ நாடாரான மனோஜ் பாண்டியனை வலைவீசி திமுக பிடித்தது..

மனோஜ் பாண்டியன் ஒரு சட்டப்போராளி.. இவரது தந்தை பி.எச். பாண்டியன் முன்னாள் சபாநாயகர் தாயார் சிந்தியா பாண்டியன், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தனர்.. இப்படியொரு பெரிய கல்வியாளர் குடும்பம் அது.
கிறிஸ்துவ நாடார் வாக்குகள்
கிறிஸ்துவ நாடார் வாக்குகளை எடுப்பதற்கான யுக்திதான் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது.. இப்போது ஓபிஎஸ்ஸுக்கு அரசியல் என்பதே கண்ணுக்கெட்டிய தூரம்வரை இல்லை. அந்தவகையில், மனோஜ் பாண்டியனுடைய அரசியல் பி.எச். பாண்டியனுடன் முடிந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆவுடையப்பன் உடனிருக்கிறார்.. ஆவுடையப்பன் மூலம் ஸ்டாலினிடம் பேசி, மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.
எம்எல்ஏ சீட் என்பது திமுகவில் பெரிய விஷயம் இல்லை. ஆனால், ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த மனோஜ் பாண்டியனுக்கு மீண்டும் சீட் தந்தாக வேண்டும். அப்படி தந்தால்தான், கிறிஸ்துவ வாக்குகள் சாரை சாரையாக திமுகவுக்கு விழும்..
இதனிடையே, கிறிஸ்தவ மிஷினரிகள், புதிய அதிகார மையத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.. அவர்தான் ஜோசப் விஜய்.. எனவே இதையும் உடைக்க வேண்டிய தேவை திமுகவுக்கு வந்துள்ளது..
3 சதவீத கிறிஸ்தவ வாக்குகள்
அதேபோல, மதுரை, திநெல்வேலி, தூத்துக்குடியிலுள்ள கிறிஸ்துவ மிஷனரிகள், ஒரு வலுவான தலைவர் சொன்னால் அப்படியே கேட்கும்.. இவர்களால் 3 சதவீத ஓட்டு உள்ளது. இந்த 20 லட்சம் ஓட்டுக்களையும் திமுக எடுக்க வேண்டியிருக்கிறது.
அதேபோல, கிறிஸ்த வாக்குகள் அதிகமாக உள்ள மாவட்டமே தமிழகத்தின் தெற்கு பகுதிதான்.. திருநெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் அதிகம்.. அங்கே ராதாகிருஷ்ணனுக்கே பெரும்பாலான ஓட்டுக்கள் விழும்.. எனவே இதையும் திமுக உடைக்க வேண்டியிருக்கிறது. இப்படி பல கணக்குகளை திமுக போட்டுள்ளது..
டெல்டாவின் முக்கிய புள்ளி
டெல்டா பகுதியிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சரை , திமுகவுக்கு கொண்டு வரப்போவதாக சொல்கிறார்கள்.. அவர் வேறு யாருமில்லை.. வைத்திலிங்கம்தான்..
ஓபிஎஸ் பக்கமிருந்து வைத்திலிங்கத்துக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.. அதிமுக ஒன்றிணைய பலமுறை துண்டு போட்டு பார்த்தார் வைத்திலிங்கம்.. ஒரு பலனும் கிடைக்கவில்லை.. தற்போது ஆளும் கட்சி என்ற பிரம்மை இருப்பதால், இவர்கள் எல்லாம் திமுக நோக்கி செல்கிறார்கள். அந்தவகையில், மனோஜ் பாண்டியன் மூலம் வைத்திலிங்கம் திமுகவில் இணைவதற்கான பேச்சுக்கள் தற்போது நடந்து வருகின்றன.
அதேபோல விழுப்புரம், திண்டிவனத்தில் திமுக மிக தீவிரமாக அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது.. அங்கே திமுகவில் வலுவான நபர் யாரும் இல்லை" என்றெல்லாம் பாண்டியன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications