சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேளாங்கண்ணி மாதா கோவிலில் பிரார்த்தனை செய்த எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

சென்னை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

நிவர் புயல் காரணமாக கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

CM Edappadi Palaniswami has offer prayer in Velankanni Madha Church

இந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். இன்று அவர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இதையொட்டி இன்று காலை 8 மணி அளவில் அவர் நாகை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு வருகை தந்தார்.

 'கமிஷன் நாயகர்’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை நாயகர் பட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி 'கமிஷன் நாயகர்’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை நாயகர் பட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

தேவாலய பங்கு தந்தை பிரபாகரன் முதல்வரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பிறகு தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதல்வர் பங்கேற்றார். அப்போது வேளாங்கண்ணி மாதா சொரூபம் நினைவு பரிசாக முதல்வருக்கு வழங்கப்பட்டது.

இதன்பிறகு நாகூர் தர்கா பகுதியில் முதல்வர் ஆய்வு செய்கிறார். மாலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்கிறார்

English summary
CM Edappadi Palaniswami has offer prayer in Velankanni Madha Church, while he is on his rain review tour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X