சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம்பரம்பாக்கம் ஏரியை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. பருவமழை தீவிரம் எதிரொலி

செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் முக ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு பார்வையிடுகிறார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக நாளை முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிடுகிறார்.

தமிழகத்தில் மழை பொழிவு பரவலாக இருந்து வருகிறது.. நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

நேற்று, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்தது..

மீனவர் படகு மீது கப்பலை விட்டு மோதிய இலங்கை கடற்படை..கடலில் மூழ்கிய தமிழர் சடலமாக மீட்பு.. பரபரப்பு மீனவர் படகு மீது கப்பலை விட்டு மோதிய இலங்கை கடற்படை..கடலில் மூழ்கிய தமிழர் சடலமாக மீட்பு.. பரபரப்பு

 மழை

மழை

இன்று, தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறியது.

 5 நாட்கள் மழை

5 நாட்கள் மழை

மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை, 20 தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும், 21ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

 கனமழை

கனமழை

அதேபோல, வெள்ளிக்கிழமையும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை, இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியது.

 9 மாவட்டங்கள்

9 மாவட்டங்கள்

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியானது.. அதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 2 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

 நீர்த்தேக்கம்

நீர்த்தேக்கம்

கடந்த 15 நாட்களுக்கும் மேலாகவே தமிழகம் முழுக்க மழை பொழிவு இருந்துவருவதால், அணைகள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருகின்றன.. எனினும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... அந்தவகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து நாளை காலை 10 மணிக்கு முதல்வர் ஆய்வு செய்கிறார்.

 பெருவெள்ளம்

பெருவெள்ளம்

கடந்த 2015-ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது.. அப்போது முன் அறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர்.. இது மறைந்த ஜெயலலிதா அரசுக்கு மிகுந்த கெட்ட பெயரை ஏற்படுத்தியிருந்தது.. இத்தனை பேர் உயிரிழந்ததற்கு அமைச்சர் உதயகுமார் தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது குற்றம்சாட்டியிருந்தார்..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதற்கு பிறகு 5 வருடங்களாகவே அந்த ஏரி திறக்கப்படவில்லை.. ஆனால், கடந்த வருடம் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கிய நிலையில், 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டது.. அப்போது, ஏரியை ஆய்வு செய்வதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு சென்று ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
CM MK Stalin inspection Chembarambakkam Dam tomorrow morning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X