சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஸ்டிரிக்ட்" ஸ்டாலின்.. அதிரடி ஆக்‌ஷன்.. விரைவில் "டெல்லி" பயணம்.. சைலண்ட்டில் பாஜக.. கப்சிப் அதிமுக

பிரதமரை முதல்வர் ஸ்டாலின் விரைவில் சந்திப்பார் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ஸ்டிரிக்ட் அணுகுமுறையால் பாஜக தலைமையே ஆடிப்போய் உள்ளதாம்.. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் யாரெல்லாம் ஊழல்புரிந்தார்களோ, அவர்கள் மீதான நடவடிக்கையை ஸ்டாலின் விரைவில் எடுக்க உள்ளதாகவும், அதற்காக கூடிய சீக்கிரம் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பார் என்றம் தகவல்கள் கூறுகின்றன.

Recommended Video

    Modi-யை சந்திக்க Stalin விரைவில் டெல்லி பயணம்..? | Oneindia Tamil

    10 வருடங்களுக்கு பிறகு, ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே ஸ்டாலினின் செயல்பாடுகள் பெரிதும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது..

    'இந்த நாள் அமெரிக்காவிற்கு சிறந்த நாள்'.. முககவசத்தை மகிழச்சியுடன் கழற்றி போட்ட அதிபர் பைடன்! 'இந்த நாள் அமெரிக்காவிற்கு சிறந்த நாள்'.. முககவசத்தை மகிழச்சியுடன் கழற்றி போட்ட அதிபர் பைடன்!

    கொரோனா பிரச்சனையை தமிழக அரசு கையாளுவது ஒரு பக்கமும், தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை நிறைவேற்றும் முயற்சியில் ஒருபக்கமும் திமுக தலைமை இறங்கி வந்தாலும், அதிமுக & பாஜக சம்பந்தமாக வேறு சில விஷயங்களையும் கையில் எடுத்து உள்ளதாம்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இதுகுறித்து நாம் சிலரிடம் பேசினோம்.. இனி அடுத்து ஸ்டாலின் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்க போகிறார், அது தேசிய அரசியலையும் அசைத்து பார்த்தது போல இருக்குமா? என்ற கேள்விகளை முன்வைத்தோம். அவர்கள் சொன்னதாவது:

    வரி

    வரி

    "இப்போது என்றில்லை.. எப்போதுமே மத்திய அரசால் தமிழகத்தை பகைத்து கொள்ள முடியாது.. காரணம், ஜிஎஸ்டி வரியில் பெரும்பங்கு தமிழகத்தில் இருந்துதான் செல்கிறது.. அந்த வகையில், தமிழகம் மிக முக்கியமான மாநிலம். ஆனால், ஊழலற்ற அரசையே பாஜக விரும்புவதால், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், எப்படியும் ஏதாவது விவகாரத்தில் சிக்கும், அதைவைத்து அரசியல் செய்யலாம் என்ற முடிவில் இருந்ததாக தெரிகிறது.

     அதிகாரிகள்

    அதிகாரிகள்

    ஆனால், ஸ்டாலின், இறையன்புவை தமிழக தலைமை செயலாளராக நியமித்ததே பாஜக தலைமைக்கு பெரிய ஷாக்தான்.. அதாவது யாரையெல்லாம் மாநில அரசு அன்று வஞ்சித்ததோ, அந்த திறமைசாலிகளைதான் குறிப்பாக, உதயசந்திரன், இறையன்பு போன்றோர்களுக்கு மிக முக்கியமான பொறுப்பை ஸ்டாலின் தந்துள்ளார். இதனால், பாஜக சற்று ஜெர்க் ஆகி உள்ளது.

    அமித்ஷா

    அமித்ஷா

    காவல்துறை அதிகாரி கந்தசாமி நியமனமே அவர்களுக்கு தந்த மறைமுக பதிலடியாக கூட எடுத்து கொள்ளலாம். பாஜக ஆட்சியில் இருந்த குஜராத்தில், அமித்ஷாவையே கைது செய்து கூட்டிச் சென்றவர் ஆயிற்றே.. எனவே, உயர் அதிகாரிகள் நியமனமே பாஜகவுக்கு கலக்கத்தை தந்துள்ளது.. இது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும் கிலியை தந்துள்ளது... அப்படி இருக்கும்போது, திமுக மீது பழியை போடவோ, அரசியல் செய்யவோ இடமில்லை.

     முதல்வர்

    முதல்வர்

    இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டி உள்ளது.. வழக்கமாக புதிதாக பதவியேற்ற மாநில முதல்வர் யாராக இருந்தாலும், டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது வழக்கம்... அந்த வகையில் ஸ்டாலினும் விரைவில் டெல்லி செல்லலாம்.. இப்போது கொரோனா பிரச்சனை இருப்பதால், இது குறைந்ததும் அவர் டெல்லி செல்லலாம்..

     அதிமுக

    அதிமுக

    ஸ்டாலினின் இந்த டெல்லி பயணத்தை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள். ஸ்டாலினின் டெல்லி பயணம் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.. இதனால் பாஜகவுக்கு மறைமுக குடைச்சலை ஸ்டாலின் தருவார் என்றால், அதிமுகவுக்கு நேரடியாக குடைச்சலை ஏற்படுத்தும்.. எல்லாவற்றிற்கு மேலாக தேசிய அரசியலில் ஸ்டாலினின் மவுசும் எகிறும்.." என்றனர்.

    English summary
    CM MK Stalin meet PM Modi Soon, Say Sources
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X