மக்கள் தொகை பெருக்கம்- நிர்மலா சீதாராமன் கருத்து- தமிழகத்துக்கு எதிரான பெரும் சதி? ஸ்டாலின் ’அலாரம்’
சென்னை: மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பதன் பின்னணியில் தமிழ்நாட்டுக்கு எதிரான மிகப் பெரும் சதி இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக பெரும் சர்ச்சையும் கோப குரல்களும் வெடித்துள்ளன. தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது; டெல்லியில் திமுக எம்பிக்கள் போராடுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ், தென்னிந்தியா தனிநாடு கோரும் நிலைமை உருவாகிவிட்டது என அதிரடியாக கூறியுள்ளார்.

மக்கள் தொகை பெருக்கம்- ஆய்வு குழு: இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க, ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பட்ஜெட் வஞ்சகம்:தென்னிந்தியா ’தனிநாடு’ கோரும் நிலைமை ஏற்படும்- கர்நாடகா காங். எம்பி பகீர் குரல்!
டார்கெட் முஸ்லிம்கள்?: இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறுகையில், இஸ்லாமியர்களை இலக்கு வைத்துதான் இப்படியான ஒரு அறிவிப்பை நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அஸ்ஸாமில் ஆளும் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இதேபோல சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார் என சுட்டிக்காட்டி இருந்தனர்.
மாநிலங்களுக்கு எதிரான சூழ்ச்சி?: ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு எதிரான மிகப் பெரும் சதி என எச்சரித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்த முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில், மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா எனச் சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளையில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என எச்சரித்திருக்கிறார்.
அடுத்த பஞ்சாயத்து ரெடி!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications