நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல பாஜக எதையும் செய்யும்! திமுகவினர் தயாராகுங்கள்.. ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல பாஜக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடந்த திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
திமுகவில் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி என மொத்தம் 23 அணிகள் உள்ளன. அனைத்து அணிகளுக்கும் அண்மையில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் அனைத்து அணிகளின் ஆலோசனை கூட்டம் நிகழும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய தினம் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் திமுகவின் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டமும் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் எவ்வாறு தயாராவது என்பது குறித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அனைத்து அணிகளின் நிர்வாகிகளிடம் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அவர்களை தோற்கடிக்க திமுக நிர்வாகிகள் தற்போதே தயாராக வேண்டும். அணிகளில் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமையாக கருதிக் கொண்டு இருக்காமல் களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications