ஜனாதிபதி + முதல்வர் பதக்கம்.. போலீஸ் - தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கி கவுரவித்த ஸ்டாலின்
சென்னை: போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான ஜனாதிபதி, மத்திய உள்துறை மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி கவுரவித்தார்.
இந்தியா முழுவதும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் பணியாற்றி வரும் போலீஸ்காரர்கள், வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பணியை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் பணியில் மெச்சத்தகுந்த சேவை செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உயரிய விருதுகளான ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி காவல்துறை, தீயணைப்பு வீரர்களுக்கு குடியரசு தலைவர் பதக்கம், உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் மற்றும், தமிழ்நாடு முதலமைச்சர்கள் பதக்கம் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் சுதந்திர தினத்தையொட்டி பதக்கம் வெல்வோரின் பெயர்கள் என்பது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பதக்கம் அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.
அதன்படி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மாலை 5 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதன்பிறகு டிஜிபி சங்கர் ஜிவால் வரவேற்று பேசினார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை ஒவ்வொரு போலீசாருக்கும் வழங்கி கவுரவித்தார். விழாவில் சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்கள், பதக்கம் வாங்கிய காவல்துறை அதிகாரிகள், காவலர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications