நரிக்குறவர் இன வீட்டில்... பாசி மணியை அணிந்து கொண்டு காபி, இட்லி சாப்பிட்ட முதல்வர்
நரிக்குறவர் இன மாணவி வீட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் காபி குடித்து விட்டு நாட்டுக்கோழி குழம்புடன் இட்லி சாப்பிட்டார்.
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நரிக்குறவர் இன மாணவி வீட்டிற்கு சென்று காபி, இட்லி நாட்டுக்கோழி குழம்பு ஊற்றி சாப்பிட்டார். அந்த மாணவிகள் அன்போடு அளித்த பாசி மணியை அணிந்து கொண்டார். விளிம்பு நிலை மக்களின் தைரியமான பேச்சு ஆச்சரியத்தை தருவதாகவும் என்றைக்கும் நமது அரசு துணை நிற்கும் என்றும் கூறினார்.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 3 மாணவிகளும் பேசினர்.
அப்போது, மாணவிகளின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.
இதனையடுத்து ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் நாசர், ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் ஆகியோர் நேரில் சென்றனர். மேலும், முதல்வரை சந்தித்த 3 மாணவிகள் உட்பட 40 பேரை சந்தித்து அவர்களின் கல்வி குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து நரிக்குறவ மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இன்னும் ஒரு வாரத்தில் தங்களை காண நேரில் வருவதாக வாக்குறுதி அளித்தார்.

சோறு போடுவீங்களா
அப்போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலி,ன உங்கள் வீட்டிற்கு வந்தால் சோறு கொடுப்பீர்களா என கேட்டார். அதற்கு, தங்களுக்கு கறி சோறு போடுவதாக மாணவிகள் சந்தோஷமாக பதிலளித்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக ஒருநாள் வருவேன் என்று கூறினார்.

சொன்னதை செய்த முதல்வர்
முதல்வர் சொன்னது போலவே இன்றைய தினம் ஆவடியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்றார். அவரை நேரில் பார்த்த உடன் அனைவரும் உற்சாகமடைந்தனர். மாணவிகள் பூ கொடுத்தும் பாசிமணி அணிவித்தும் வரவேற்றனர். அங்கிருந்த மாணவியின் வீட்டிற்கு சென்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

டீ, இட்லி, வடை
இதனையடுத்து முதல்வருக்கு புது எவர்சில்வர் டம்பளரில் காபி கொடுக்கப்பட்டது. பின்னர் தட்டில் வைத்து இட்லி, வடை, நாட்டுக்கோழி குழம்பு, சட்னி அளிக்கப்பட்டது. அதனை அன்போடு சாப்பிட்ட முதல்வர் உணவு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறினார். முதல்வர் இட்லி சாப்பிடும் முன்பாக அருகில் இருந்த குழந்தைக்கு இட்லியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.

காரமான உணவு
உணவு காரமாக இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்களே காரமாக சாப்பிட்டால்தான் சளி இருமல் வராது என்றும் தெரிவித்தனர். முதல்வர் நேரில் வந்தது இன்னமும் கூட நம்ப முடியாமல் இருப்பதாக மாணவிகளும் பெற்றோர்களும் தெரிவித்தனர். கனவில் நடப்பது போல இருப்பதாகவும் கூறினர். சொன்னபடி மாணவிகளின் வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு வந்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

விளிம்பு நிலை மக்கள்
தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இதுபோன்ற விழாவில் பங்கேற்பதுதான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். சென்னை மேயர், அமைச்சர், துணை முதல்வராக இருந்தபோது முதல்வராக இருந்த போதும் எத்தனையோ விழாவில் பங்கெடுத்துள்ளேன். உங்களைப் போன்ற அன்பானவர்கள் கொடுக்கும் வரவேற்பும், இதுபோன்ற விழாக்களும்தான் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
விளிம்பு நிலை மக்களுக்கு என்றைக்கும் திமுக அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications