மு.க.தமிழரசு மாமியார் மரணம்.. அஞ்சலி செலுத்த இன்று கோவை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இளைய மகனான மு.க. தமிழரசுவின் மாமியார் காலமான நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்வர் ஸ்டாலின் கோவை செல்கிறார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசு. இவர் சென்னையில் ஷோரூம்களையும், கூடவே திருமண மண்டபங்களையும் நடத்தி வருகிறார்.

கருணாநிதியின் வாரிசாக இருந்தாலும் கூட முதல்வர் ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரை போல இல்லாமல் அரசியலைவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருப்பவர் மு.க.தமிழரசு. மு.க.தமிழரசு - மோகனா தம்பதியின் மகன் தான் பிரபல திரைப்பட நடிகர் அருள்நிதி.
இந்நிலையில், மு.க.தமிழரசு மாமியார் ஜெயலட்சுமி (80) நுரையீரல் பிரச்சினை மூச்சுத்திணறலால் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை காலமானார்.
மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி கோவையில் காலமான நிலையில், அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்வர் ஸ்டாலின் கோவை செல்கிறார்.
இதற்காக இன்று (டிச.21) காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், இன்று மாலையே சென்னை திரும்புகிறார்.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு












Click it and Unblock the Notifications