சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம்.. உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'ஒவ்வோராண்டும் மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் சமுதாயத்தில் 3ம் நாள் முழுவதும் ஒருங்கிணைத்து, 'அனைத்து நாடுகள் கொண்டாடப்படுகிறது.

சம் உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் அமைந்துள்ளது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.. ஏமாற்றத்தில் மக்கள் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.. ஏமாற்றத்தில் மக்கள்

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்

இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம்

மாற்றுத்திறனாளிகளின் அவர்களின் உருவாக்கவும், வாழ்வாதாரத்தை திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள் அவர்கள் உற்பத்தி மேம்படுத்தும் வகையில் வழங்கி வேலைவாய்ப்பினை செய்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தியும், அவர்கள் தன்னிச்சையாக பிறரைச் சாராமல் வாழ்வதற்கு பயன்பெறும் நவீன உதவி உபகரணங்கள் பற்றியும் விவரங்களைக் காட்சிப்படுத்தியும், இந்த நாள் மாநிலம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறது.

சமவாய்ப்புகள்

சமவாய்ப்புகள்

இந்நாளில், நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவர்களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோமாக' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம் 3 ஆம்தேதி கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

இதையொட்டி தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகத்தினர் நடத்தியுள்ளனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து விளையாட்டு போட்டியை ஒரு மாவட்ட ஆட்சியர் தரையில் அமர்ந்து அவர்களுடன் விளையாடி போட்டிகளை தொடக்கி வைத்தார். அது போல் இன்றைய தினம் டெலிவரி செய்யப்பட்டுள்ள ஆவின் பால் பாக்கெட்டுகளில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகள் இடம்பெற்றுள்ளன.

சிந்தனையில் மாற்றம்

சிந்தனையில் மாற்றம்

சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம் என்ற வாசகம் அந்த பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளன. அது போல் ஊதா நிறத்தில் ரிப்பன் மாளிகையில் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலித்தது. மாற்றுத்திறனாளிகளும் கடல் அன்னையின் அரவணைப்பை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கென மெரினாவில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது போல் பிற கடற்கரைகளிலும் அமைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களது நிலையை கண்டு வருந்திடாமல் மற்றவர்களை காட்டிலும் தங்களால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் அனைத்திலும் முயற்சிக்க வேண்டும்.

English summary
CM Stalin has sent a greeting about International Disability day. This day is being observed from 1992.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X