இரவில் சட்டென நடந்த சம்பவம்.. செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு? ஸ்டாலின் கேட்ட கேள்வி.. ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்து வருகிறாராம். அதிகாரிகள் மூலமாக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக விசாரித்து வருகிறாராம்.

மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அவரின் உடல்நிலை மோசமாகி உள்ள நிலையில், இன்றைய விசாரணையில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

senthil balaji

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு உள்ளார். புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்.

அங்கே தற்போது ஐசியூவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்து வருகிறாராம். அதிகாரிகள் மூலமாக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக விசாரித்து வருகிறாராம். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தாலும் இப்போதும் அவர் சிறையில் உள்ளதாகவே கருதப்படுவார்.

இதனால் அவரை அமைச்சர்கள், அதிகாரிகள், முதல்வர் பார்ப்பது சரியாக இருக்காது. ஆனாலும் அவர் மூத்த எம்எல்ஏ என்பதால் அவரின் உடல்நலனை பற்றி முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனை தரப்பில் அதிகாரிகள் மூலம் விசாரித்து வருகிறாராம்.

வழக்கு விசாரணை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அவரின் உடல்நிலை மோசமாகி உள்ள நிலையில், இன்றைய விசாரணையில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதன்பின் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும், அதுவரை ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அல்லி முன்னிலையில் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அமலாக்க இயக்குனரகம் (இடி) தொடர்ந்த பணமோசடி வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக சிறப்பு நீதிபதி எஸ் அல்லி, குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதுவரை அவரது நீதிமன்ற காவலையும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+