சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளைஞர்களே வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! உங்களிடம் திறமையிருந்தால் அரசே முதலீடு செய்யும்! முழு விவரம்!

புத்தொழில் தொடங்குவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் அரசின் புதிய திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், முதற்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களையும் வழங்கினார்.

இதனால் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் இனி வரும் காலங்களில் அரசின் முதலீட்டை பெறுவதற்கான முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபடலாம்.

 தடை செய்த போது டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை தமிழ்நாட்டில் நடத்திய பிஎப்ஐ: ஆளுநர் ஆர்.என்.ரவி தடை செய்த போது டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை தமிழ்நாட்டில் நடத்திய பிஎப்ஐ: ஆளுநர் ஆர்.என்.ரவி

இது தொடர்பான விவரம் வருமாறு;

தொடக்க நிதியம்

தொடக்க நிதியம்

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் துறைகளில் உள்ள புத்தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக "தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியம்" தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்நிதியிலிருந்து, வளர்ந்து வரும் துறைகளான மேம்பட்ட உற்பத்தி, எந்திரவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம், டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, உயிர் தொழில்நுட்பம்,

வெப் 3.0., ஆழமான தொழில்நுட்பம், காலநிலை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

இந்த நிதியமானது, தமிழ்நாடு அரசின் நிதித்துறை மற்றும் தொழில் துறையின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியத்தில் தமிழ்நாடு அரசு 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மற்றும் டைடெல் பூங்கா (TIDEL PARK) ஆகியவை 50 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி செய்துள்ளது.

அனுமதி கடிதங்கள்

அனுமதி கடிதங்கள்

தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியமானது, அதன் நிதியை 2023-24 ஆம் நிதியாண்டில் 500 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தின் மூலமாக நிறுவனங்களுக்கு முதலீடுகள் வழங்கிட விளம்பரங்களின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தன்னாட்சி முதலீட்டுக் குழுவால் முதல் 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலீடு அனுமதி கடிதங்களை வழங்கினார். அதன் விவரங்கள்:

1. இ-சந்தை (E-Sandhai)

1. இ-சந்தை (E-Sandhai)

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இ-சந்தை நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை விநியோகிக்க இணையச் சந்தை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்த நிதியிலிருந்து

இ-சந்தையில் முதலீடு செய்ய 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. கைகள் (Kaigal)

2. கைகள் (Kaigal)

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கைகள் நிறுவனம் இணைய அடிப்படையிலான டிஜிட்டல் தளம் மூலம் அடிப்படை தொழிலாளரையும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் இணைக்கிறது. இந்த இணையதளம் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து கைகள் நிறுவனத்தில் முதலீடு செய்ய 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. பிளானிடிக்ஸ் (Planytics)

3. பிளானிடிக்ஸ் (Planytics)

IIT மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் அமைந்துள்ள பிளானிடிக்ஸ் நிறுவனம், சுகாதாரத் துறை சார்ந்த நிறுவனங்களில் உள்ள விநியோக சங்கிலியை திட்டமிடவும், இருப்புக் கணக்கினை நிர்வகிக்கவும் மென்பொருளினை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்த நிதியிலிருந்து பிளானிடிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. சூரிநோவா (Surinova)

4. சூரிநோவா (Surinova)

தேயிலை தோட்டங்களில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய தேயிலை அறுவடை செய்யும் தானியங்கி இயந்திரத்தை சூரிநோவா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. மிஸ்டர் மெட் (Mr. Med)

5. மிஸ்டர் மெட் (Mr. Med)

புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய் போன்ற தீவிர நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற விலையுயர்ந்த மருந்துகளை மலிவான விலைகளில் இணையம் மூலம் வழங்க ஒரு டிஜிட்டல் தளத்தை மிஸ்டர் மெட் நிறுவனம் உருவாக்கி நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு 3.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Chief Minister Stalin launched the start-up fund for emerging sectors in Tamil Nadu and also issued investment approval letters to 5 companies in the first phase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X