வேற லெவல் ஆக்ஷன்! சைபர் கிரைம் கட்டுப்பாட்டு மையம் இனி செம ஃபாஸ்ட் தான்! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
சென்னை: சைபர் கிரைம் பிரிவு தலைமையகத்தில் உள்ள 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறையை ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்திட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், போலி இணையதளங்கள், மோசடி அழைப்புகள் மூலம், ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தைத் திருடும் சைபர் குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.

சைபர் கிரைம் போலீசார், விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பணத்தை இழந்த பலருக்கும் இதுவரை பணத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் பிரிவில் அளிக்கப்படும் புகார்கள் பலவற்றில் பணம் மீட்டுத் தரப்பட்டுள்ளது. வேலை தருவதாக கூறி பணம் மோசடி, அதிக பணம் தருவதாக ஆசை காட்டி நடைபெறும் சைபர் மோசடிகளைத் தவிர்க்க, செல்போன் யூசர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இணையதள குற்றங்கள் குறித்த அழைப்புகள் பெருகி வரும் நிலையில் ஏற்கெனவே உள்ள அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதன்படி இம்மையத்தில் உள்ள 8 இருக்கைகள் இருக்கைகளாகவும், புதியதாக கூடுதல் 15 பணியாளர்களை ஒப்பளிப்பு செய்யவும் முதற்கட்டமாக இந்தாண்டுக்கு 3.10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வரால் 2023-24ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம் / கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்திட 9.28 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக இந்த ஆண்டு 3.10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இதன்மூலம் இணையதள பொருளாதார குற்றங்கள், மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை விரைவாக வங்கி கண்டறிந்து, மோசடி நபர்களிடமிருந்து பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டெடுக்க உதவிடவும், பிற இணையதள குற்றங்களிலிருந்து மக்களை காத்திடவும் இவ்விரிவாக்கம் செய்யப்பட்ட 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை பெரிதும் உதவும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications