உரையை வாசிக்க மறுத்த ஆளுநர்! சட்டென துரைமுருகன் எழ உடனே முதல்வர் தந்த சிக்னல்.. அடுத்து என்னாச்சு
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் தனது உரையை வாசிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்போது நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தாண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. ஆளுநர் ரவியின் உரையுடன் இந்த சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அங்கு நடந்தது நேர்மாறாக அமைந்தது.

ஆளுநர் ரவி: அதாவது பொதுவாக ஆளுநர் உரையை ஆங்கிலத்தில் ஆளுநர் வாசிப்பார். அதைத் தொடர்ந்து மாநிலச் சட்டசபை சபாநாயகர் அதைத் தமிழில் வாசிப்பார். ஆனால், இந்த முறை ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கவில்லை. அதற்கு அவர் இரண்டு காரணங்களை முக்கியமாகக் குறிப்பிட்டார். முதலில் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என ஏற்கனவே சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டதாகவும் இருப்பினும், தேசிய கீதம் வாசிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
அதேபோல இந்த உரையில் உள்ள சில கருத்துகளுடன் உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையில் உடன்படவில்லை என்றும் அப்படி இருக்கும் போது இதை வாசித்தால் அது அரசியல் சாசன பிரிவைக் கேலி செய்வது போல அமையும் என்று சொல்லிய அவர், இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.
வீடியோ: அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழகத்தை முழுமையாக வாசித்தார். ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கவில்லை என்ற போதிலும் சபாநாயகர் அப்பாவு பேசி முடிக்கும் வரை அங்கேயே இருந்தார். இதற்கிடையே ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்காமல் முடித்த பிறகு அங்கு நடந்த ஒரு சம்பவம் பலரையும் கவனத்தில் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சைகை காட்டிய முதல்வர்: அதாவது ஆளுநர் ரவி உரையை வாசிக்க மறுத்துவிட்ட அமர்ந்த நிலையில், அப்போது மூத்த அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன் எழுந்தார். அவர் ஏதோ பேச வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் முதல்வரிடம் ஏதோ சொல்ல.. உடனே முதல்வரும் துரைமுருகனைப் பார்த்து ஏதோ சைகை செய்தார். உடனே அமைச்சர் துரைமுருகன் அமர்ந்துவிட்டார். இதன் பிறகு தான் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையைத் தமிழில் வாசித்தார்.

அப்பாவு ஆளுநர் உரையை வாசித்து முடித்த பிறகு எழுந்த அவை முன்னவர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது ஆளுநர் ரவி உடனே அங்கிருந்து கிளம்பினார். அதாவது ஆளுநரின் உரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரசு சமர்ப்பித்தபடியே அவை குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஆளுநர் பேசியது எதுவும் அவை குறிப்பில் ஏறாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் நிறைவேறியது.
என்ன காரணம்: ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அமர்ந்த போது அமைச்சர் துரைமுருகன் இந்த தீர்மானத்தைத் தான் கொண்டு வரவே எழுந்துள்ளார். இருப்பினும், ஆளுநர் தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்த பிறகு இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்பதற்காகவே முதல்வர் சைகை காட்டியுள்ளார். இதன் காரணமாகவே பேச எழுந்த துரைமுருகனும் அப்போதே சட்டென அமர்ந்துவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications