இது நடந்திருந்தால்.. திருமாவுக்கு நானே திருமணம் செய்து வைத்திருப்பேன்! முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: ‛‛இன்றைக்கு இருப்பது போல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் நெருக்கமாக பழகி இருந்தால் நானே ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன். அது இயலாமல் போய்விட்டது'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரான தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் முக ஸ்டாலின் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் 60 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கான விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது பாஜக கட்சியினரை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புலியாக உறுமுகிறார்
தொல் திருமாவளவனை பார்த்தால் 60 வயது ஆனவர் போல் தெரியவில்லை. மேடையில் ஏறினால் 20 வயது நபரை போல் சிறுத்தையாக சீறுகிறார். புலியாக உறுமுகிறார். 60 வயது என சொல்லமுடியாத அளவுக்கு தான் தோற்றமளிக்கிறார். 50 வயதானபோது 2012 பொன்விழா நடைபெற்றது. இதில் கருணாநிதி பங்கேற்று வாழ்த்தினார். இன்று 60வது பிறந்தநாளுக்கு நான் வாழ்த்த வந்திருக்கிறேன். அன்று அப்பா வாழ்த்தினார். இன்று அவரது பிள்ளையான நான் வாழ்த்துகிறேன்.

திருமணம் செய்து வைத்திருப்பேன்
பொதுவாக பிறந்தநாள் என்று சொன்னால் பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வோம். இன்றைக்கு இருப்பது போல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் நெருக்கமாக பழகி இருந்தால் நானே ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன். அது இயலாமல் போய்விட்டது. தலைவர் கருணாநிதியை சந்திக்க வரும்போதெல்லாம் பலமுறை சொல்லி இருக்கிறார். நான் பக்கத்தில் இருந்து கேட்டவன். எப்படியாவது திருமணம் செய்து வைக்க கலைஞர் முயற்சி செய்தார். திருமாவளவன் வரும்போதெல்லாம் அவரது திருமணம் குறித்த விஷயத்தை கலைஞர் முன்வைப்பார். திருமாவளவன் தலையசைத்தாலும் இதுவரை நடக்கவில்லை. கருணாநிதி சொல்லி திருமாவளவன் கேட்காத ஒரு செயல் உள்ளது என்றால் அது இதுவாக தான் இருக்கும்.

கட்சியையே திருமணம் செய்த திருமா
இருப்பினும் தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அரங்கில் மட்டும் அல்ல பல ஊர்களில் உள்ள சிறுத்தை குட்டிகள் தான் அவரது பிள்ளைகள். அந்த பிள்ளைகளுக்கு எல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் உங்களுக்கு தாயும், தந்தையுமாக இருக்க கூடிய திருமாவளவனை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்கள் அனைவரிடமும் இருக்கிறது. திருமாவளவனுக்கு மீண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இவ்வாறு பேசினார்.

பாஜகவுடன் தொடர்பு இல்லை
முன்னதாக, ஸ்டாலின் பேசுகையில், ‛‛திமுகவுக்கும், பாஜகவுக்கு இடையே உறவு இல்லை. திமுகவின் கொள்கைக்கும், பாஜகவின் கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது. ஆகவே திருமாவளன் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம். எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் திமுகவின் கொள்கைகளை ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டான். இந்த விஷயத்தில் குறைந்தபட்ச சமரசம் கூட செய்து கொள்ள மாட்டேன்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications