கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழா: பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் ஸ்டாலின் நன்றி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு ரூ 100 நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ 100 நாணயம் இன்று வெளியிடப்படுகிறது. இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இன்று மாலை 6.50 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

இந்த நிலையில் கருணாநிதியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலிலும் இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக திகழ்ந்தவர் கருணாநிதி. தனக்கென தனி முத்திரை பதித்த கருணாநிதியின் இலக்கியம் மற்றும் அவரது படைப்புகள் மூலம் அவருக்கு கலைஞர் என்ற அன்பான பட்டம் கிடைத்தது ஒரு அரசியல் தலைவராக சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை கோடிட்டு காட்டி பலமுறை பணியாற்றியவர்.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுவது கருணாநிதியின் நினைவையும் அவரால் நிலை நிறுத்தப்பட்ட லட்சியங்களையும் போற்றும் வகையில் இருக்கும். இந்த தருணத்தில் கருணாநிதிக்கு எனது இதையப்பூர்வமான அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கலைஞரின் தொலை நோக்கு பார்வை உதவும்.
தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பேணிக்காப்பதில் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரின் பங்கு மகத்தானது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியிட்டு விழா மாபெரும் வெற்றி அடையட்டும் என்று பிரதமர் மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அது போல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: கலைஞரின் சமூக பார்வை லட்சக்கணக்கானோரை சுய மரியாதையுடன் வாழ வழி வகுத்தது. கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்றது என தெரிவித்திருந்தார். அவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications