Vijay sad: ஜோ ஜோ என அழைத்த பெரியம்மா அமல் காலமானார்! உடைந்து நீலாங்கரை ஹோமிற்கு சென்ற விஜய்
சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள Mother Josephine Vannini என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த முதல்வர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகரன் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 92.
பெரியம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தனது தாய், தந்தையுடன் முதல்வர் விஜய் நேரில் சென்றிருந்தார். சிறு வயதில் பெரியப்பா, பெரியம்மாவுடன் நிறைய நேரங்களை செலவிட்டிருந்த விஜய்க்கு, தற்போது பெரியம்மாவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோர கிராமம் முத்துப்பேட்டை. இது விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரின் பூர்வீக ஊராகும். இவரது தந்தை சேனாதிபதி பிள்ளையின் கல்லறை அங்குள்ள ஒரு சர்ச் வளாகத்தில்தான் இருக்கிறது.
எஸ்ஏசி
அந்த கல்லறைக்கு எஸ்ஏசி அடிக்கடி சென்று வருவார். 4 தலைமுறைகளாக அந்த முத்துப்பேட்டை கிராமத்தில் விஜய் குடும்பத்தினர் வசித்து வந்தனர். எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ராஜசேகரன், தனசேகரன் ஆகிய இரு அண்ணன்களும் ஒரு தங்கையும் உள்ளனர்.
தங்கை இறப்பு
தனசேகரனும் தங்கையும் ஏற்கெனவே இறந்துவிட்டனர். தற்போது ராஜசேகரன் பார்ப்பதற்கு விஜய் போலவே இருக்கிறார் என்கிறார்கள். அவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். 6 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள பவர் ஸ்டேஷனில் பணியாற்றினார்.
சென்னை நீலாங்கரை
இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள Mother Josephine Vannini எனும் முதியோர் இல்லத்தில் தனது மனைவியுடன் ராஜசேகரன் வசித்து வந்தார். அவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த மூன்று பேரும் வெளிநாட்டில் உள்ளனர்.
பார்க்க ஆள் இல்லை
இதனால் தங்களை பார்த்து கொள்ள ஆள்கள் இல்லாததால் அவர்களாகவே ஹோமில் சேர்ந்துவிட்டனர். இங்கு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை கிடைத்து வந்தன. அது போல் தினசரி இருவரும் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
வாரந்தோறும் பரிசோதனைகள்
வாரந்தோறும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று காலை திடீரென உடல்நல பாதிப்பால் அமல் காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரும், ஷோபாவும் வந்து அஞ்சலி செலுத்தினர். தகவலறிந்த விஜய்யும் அந்த இல்லத்திற்கு சென்று தனது பெரியம்மாவிற்கு அஞ்சலி செலுத்தினார். விஜய்யின் பெயர் ஜோசப் விஜய் என்பதால் அவரை வீட்டில் உள்ளவர்கள் ஜோ ஜோ என்றே அழைத்துவந்தனர். இதை தாய் ஷோபா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
விஜய்க்கு தங்கை
முதல்வர் விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார். அவர் விஜய் 9 வயதாக இருந்த போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது விஜய்யை மிகவும் பாதித்தது. அது வரை கலகலப்பாக இருந்த விஜய், தங்கை மறைவு முதலே அமைதியாகவும் தனிமையாகவும் இருந்து வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
வி.வி. புரொடெக்ஷன்ஸ்
தனது தங்கையின் நினைவாக தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு வி.வி. புரொடெக்ஷன்ஸ் என்று பெயரிட்டிருந்தார். அது போல் தனது தங்கையின் நினைவாக தான் வாங்கும் கார்களுக்கு அவரது பிறந்தநாளை நினைவுப்படுத்தும் விதமாக 14.02.77 என்பதை TN 14 ** 0277 என்று அமையும் வகையில் வாங்கிக் கொள்கிறார்.
தங்கை வித்யா மறைவு
தனது தங்கை இருந்திருக்கலாம் என பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தார். சிறு வயதில் வித்யாவுடன் விஜய் நிறைய நேரம் செலவிட்டதாகவும் அவரது திடீர் மறைவு விஜய்யை புரட்டி போட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு தனது சொந்தத்தில் பெரியம்மாவின் இறப்பு அவருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.




Click it and Unblock the Notifications
