ரூ.6 ஆயிரம் கோடி தங்க நகை கடன்களும் மார்ச் 31க்குள் தள்ளுபடி.. ஹேப்பி நியூஸ் சொன்ன ஐ.பெரியசாமி
:மார்ச் 31ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் பொது நகைக்கடன் வரும் 31ஆம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான செயலிலும் அரசு செய்து வருகிறது.
நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக தகவல்கள் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யவும் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.

நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதி
2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது. 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள் , எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

35 லட்சம் பேருக்கு தள்ளுபடியில்லை
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என தகவல் வெளிவந்தது. அதேசமயம் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என தகவல் வெளியானது. அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் 35,37,693 நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நகைகள் எப்போது கிடைக்கும்
இதையடுத்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் எப்போது திரும்ப வழங்கப்படும் என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர். நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு தணிக்கை
இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விபரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த சிறப்பு தணிக்கையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுறவு சங்ககளிலும் அயல் மாவட்ட தணிக்கையாளர்கள் மூலம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மார்ச் 31ல் தள்ளுபடி
இந்நிலையில், வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் பொது நகைக்கடன் வரும் 31ஆம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications