"கோட் ரெட்".. உலகின் மொத்த கடல் நீரோட்டமே பாதிக்கப்பட போகிறது.. ஏன்? எப்படி? எச்சரிக்கும் வல்லுனர்!
சென்னை: சூழலியல் ஆய்வாளர் சென்னை பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தரராஜன் காலநிலை மாற்றம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.
இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.

ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம்.
கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத்தீகள் வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும் என்று ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான் சூழலியல் ஆய்வாளர் சென்னை பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தரராஜன் காலநிலை மாற்றம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது போஸ்டில், ஆர்க்டிக் பெருங்கடலின் நிலை குறித்து நேச்சர் இதழில் வந்துள்ள ஆய்வு கட்டுரை அதிர்ச்சியின் உச்சம். "ஐஸ் இல்லாத ஆர்க்டிக் கோடை" என்பது 2050க்கு பிறகுதான் வரும் என்று முந்தைய ஆய்வுகள் சொல்லிவந்த நிலையில், இப்போது வந்துள்ள ஆய்வு, 2030ஆம் ஆண்டு, அதாவது இன்னும் ஆறு ஆண்டுகளுக்குள் நிகழும் என்று தெரிவித்திருப்பது உலக நாடுகளை மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்க்டிக்கில் பனி இல்லாமல் போனால் என்ன, அதிலும் கப்பல் விடலாம் என "சில அதிமேதாவிகள்" சொல்லலாம், ஆனால் கடல் வளத்தில், ஜெட்ஸ்ட்ரீம் என்று சொல்லக்கூடிய "பெருங்கடல் நீரோட்டங்களில் பெரிய தாக்கம் ஏற்படும், இந்த நீரோட்டங்கள்தான் (Ocean Currents) உலக வானிலையை தீர்மானிக்கின்றன. இந்த அறிக்கை உலக நாட்டின் தலைவர்கள் நடவடிக்கைகளை கோருகிறது. இப்போது வந்துள்ள அறிக்கை இதற்கு முந்தைய @IPCC_CH அறிக்கையை "ஒன்றுமேயில்லை" என்பது போல் எடுத்துக்காட்டுகிறது.
சமீபத்தில்தான் சென்னையின் "வெட்-பல்பு" வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சென்னை பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தரராஜன் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், எச்சரிக்கை தகவல்: இன்று சென்னையின் "வெட்-பல்பு" வெப்பநிலை 31,3 டிகிரியை எட்டிவிட்ட்டது. பொதுவாக இது "வெப்ப அளவு" (Temperature) மற்றும் வீத ஈரப்பதம் (humidity) கொண்டு "வெட்-பல்பு" வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. "வெட்-பல்பு" வெப்பநிலை 30 டிகிரியை தாண்டினால் மிகவும் சிக்கலாகும்.
32டிகிரிக்கு மேல் சென்றால் சிக்கல் கூடுதலாகும், 35 டிகிரியை தொட்டுவிட்டால் உடல் தன்னை குழுவிற்கும் தன்மையை இழந்துவிடும். இந்த பின்னணியில் "வெட்-பல்பு" நிலை 2050 வாக்கில் வரும் என்றுதான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போதே அந்த நிலையை நெருங்குவது கவலை அளிக்கக்கூடிய அம்சம்., என்று குறிப்பிட்டு இருந்தார்.
வெட்-பல்பு என்றால் என்ன? : வெப்பநிலையை கணக்கிட இரண்டு முறை பயன்படுத்தப்படும். ஒன்று ட்ரை பல்பு முறை. இதுதான் சாதாரண முறை. அதாவது காற்றில் உள்ள ஈரப்பதத்தை கணக்கிடாமல், அதன் பாதிப்பு இல்லாமல், வெப்பநிலை மானியை வைத்து காற்றின் வெப்பநிலையை கணக்கிடுவார்கள்.
அவசரச் செய்தி:-
— G. Sundarrajan (@SundarrajanG) June 7, 2023
ஆர்க்டிக் பெருங்கடலின் நிலை குறித்து @Nature ல் வந்துள்ள ஆய்வு கட்டுரை அதிர்ச்சியின் உச்சம். “ஐஸ் இல்லாத ஆர்க்டிக் கோடை” என்பது 2050க்கு பிறகுதான் வரும் என்று முந்தைய ஆய்வுகள் சொல்லிவந்த நிலையில், இப்போது வந்துள்ள ஆய்வு, 2030ஆம் ஆண்டு, அதாவது இன்னும் ஆறு pic.twitter.com/LtxKPuTkMF
நாம் தினமும் கணக்கிடும் வெப்பநிலை ட்ரை பல்பு வெப்பநிலை ஆகும். இன்னொரு வெப்பநிலைதான் வெட் பல்பு வெப்பநிலை. இந்த வெட் பல்பு வெப்பநிலை என்பது ஈரமான சூழ்நிலை ஒன்றில் காற்று ஈரபதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வெப்பநிலை அளவிடப்படும்.
இந்த வெப்பநிலை ட்ரை வெப்பநிலையை விட குறைவாக இருக்கும். அதே சமயம் இந்த வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸை தாண்டினால் காற்றில் ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகம் உள்ளது என்பதை குறிக்கும். 35 டிகிரி செல்ஸியஸை தொட்டால் காற்றில் ஈரமே இல்லை என்பதை குறிக்கும். அந்த நிலையை அடைந்தால் மக்கள் அந்த சூழ்நிலையில் உயிர் வாழ முடியாத சூழ்நிலை கூட ஏற்படும்.
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications