சென்னையை உலுக்கிய சம்பவம்.. போதை பயணியால் பறிபோன கண்டக்டர் உயிர்! ஓடும் பஸ்சுக்குள் என்ன நடந்தது?
சென்னை: சென்னை அண்ணா ஆர்ச் அருகே சென்று கொண்டுருந்த மாநகர பஸ்சில் பயணி ஒருவர் மதுபோதையில் தகராறு செய்ததால், அந்த பயணிக்கும் கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பயணி தள்ளிவிட்டதில் கண்டக்டர் கீழே விழுந்து உயிரிழந்தார். பயணிக்கும் கண்டக்டருக்கும் எப்படி பிரச்சனை ஏற்பட்டது? என்ன நடந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் - நடத்துநனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த மோதலில் பஸ்சில் இருந்து கிழே விழுந்த பஸ் கண்டகர் ஜெகன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் இன்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சென்னை எம்.கே.பி நகரில் இருந்து கோயம்பேட்டிற்கு மாநகர டவுன்ஸ் பஸ் வந்துள்ளது. பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இந்த பேருந்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன் தனது குடும்பத்தினருடன் பயணித்துள்ளார்.
சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் வந்த கோவிந்தன், மீண்டும் வேலூர் செல்வதற்காக கோயம்பேட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். பேருந்து அண்ணா ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்த போது, அடுத்த ஸ்டேஜ் நெருங்கியதால், டிக்கெட் எடுப்பதற்காக பஸ்சை ஒரமாக நிறுத்த சொல்லியிருக்கிறார் கண்டக்டர் ஜெகன்குமார்.
அப்போது டிக்கெட் எடுப்பது தொடர்பாக கண்டக்டருக்கும் பயணி கோவிந்தனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலைப்பாக மாறியிருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் பயங்கரமாக அடித்துக் கொண்டனர். பேருந்துக்குள்ளேயே இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. பேருந்தை விட்டு இறங்கி ரோட்டில் நின்றும் சண்டை போட்டுள்ளனர்.
இதில் கோவிந்தன் பிடித்து தள்ளியதில் நடத்துநர் ஜெகன்குமார் கீழே விழுந்த்தாக சொல்லப்படுகிறது. கீழே விழுந்தததில் படுகாயம் அடைந்த ஜெகன குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த அமைந்தகரை போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் சிகிச்சை பலனளிக்காமல் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்தார். உயிரிழந்த அரசுபஸ் கண்டக்டர் ஜெகன் குமாருக்கு வயது 52 ஆகும். இவருக்கு 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். காயம் அடைந்த பயணி கோவிந்தனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியுடன் சண்டை போட்டதில் கீழே விழுந்து காயம் அடைந்த கண்டக்டர் உயிரிழந்த தகவல் மாநகர பேருந்து கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் இடையே காட்டுத்தீ போல பரவியது.
இதனால், பல்வேறு இடங்களிலும் பேருந்துகளை தொடர்ந்து இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தினர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு பேருந்துகளை இயக்க பஸ் ஊழியர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் போக்குவரத்து பாதிப்பு இன்றி வழக்கம் போல ஓடின.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications