காங்கிரஸ்தான் இந்தியை திணித்ததா? ’பராசக்தி’, திமுகவை விட்டு விளாசிய காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுசாமி
சென்னை: "இன்றைக்கு கூட ஒரு திரைப்படம் வந்துள்ளது. அந்த திரைப்படத்தை தயாரிப்பது தமிழகத்தில் இருக்கக் கூடிய ஆளும் கட்சி, அந்த திரைப்படத்தில் உள்ள வசனம் பற்றி சொன்னார்கள். காங்கிரஸ்தான் இந்தியை திணிக்கிறதாம். இவர்கள்தான் எதிர்க்கிறார்களாம்" என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி திருச்சி வேலுசாமி பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகி திருச்சி வேலுசாமி, பராசக்தி படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்தான் இந்தியை திணிக்கிறதாம்
இந்த படத்தில் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எதிர்வினையாற்றி வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருச்சி வேலுச்சாமி, பராசக்தி படம் குறித்தும் திமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திருச்சி வேலுச்சாமி பேசியதாவது:-
இன்றைக்கு கூட ஒரு திரைப்படம் வந்துள்ளது. அந்த திரைப்படத்தை தயாரிப்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் கட்சி, அந்த திரைப்படத்தில் உள்ள வசனம் பற்றி சொன்னார்கள். காங்கிரஸ்தான் இந்தியை திணிக்கிறதாம். இவர்கள்தான் எதிர்க்கிறார்களாம். அந்த இந்தி எதிர்ப்பு என்பதை இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
பிதாஜி என்றுதான் அழைக்க வேண்டும்
எனக்கு இந்தி தெரியாது. இங்கு இருக்கும் பலருக்கும் இந்தி தெரியாது. ஆனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியில் படித்து பட்டம் பெற்றுள்ளாரா? இல்லையா? அந்த குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞர் மத்திய அமைச்சராக இருந்த போது, எப்படி இவ்வளவு சிறப்பாக பணியாற்றினார் என்று கேட்ட போது, அவருக்கு ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாக தெரியும். ஆகவே, அவருக்கு மரியாதை இருக்கிறது என்று சொன்னாரா இல்லையா?
ஊரிலேயே இருக்கிறவரை எல்லாம் அம்மா என்று அழைக்க முடியாது... மாதாஜி என்றுதான் அழைக்க முடியும். அப்பா என்று அழைக்க முடியாது; பிதாஜி என்றுதான் அழைக்க வேண்டும் என்று ஊருக்கு சொல்லிவிட்டு, தன் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு எல்லோருக்கும் இந்தி கற்றுக்கொடுத்துள்ளனர்.
தமிழ்தான் பாட மொழியாக இருந்தது
இந்தி இந்த நாட்டின் ஆட்சி மொழியாக வராமல் தடுக்கப்பட்டதற்கு ஒரே காரணம் சஞ்சீவ் ரெட்டி. அரசியல் நிர்ணய சபையில் ஆட்சி மொழி எது என்று விவாதம் நடைபெற்றது. அப்போது சரி சமமாக வாக்குகள் வந்தன. அந்த நேரத்தில் சஞ்சீவ் ரெட்டி தன்னுடைய வாக்கை இந்திக்கு எதிராக செலுத்தியதால்தான், அரசியல் சட்டத்தில் இந்தி ஆட்சி மொழியாக வராமல் தடுக்கப்பட்டது.
ஆகவே, எதை உயிர்க்கொள்கை என்று நீங்கள் படமெடுக்கிறீர்களோ, அந்த உயிர்க்கொள்கை இந்தியை ஆட்சி மொழியாக வராமல் தடுத்த சஞ்சீவ் ரெட்டி ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது, ஆயிரம் இருந்தாலும் விவேக் கிரியைப் பார்ப்பனார்... சஞ்சீவ் ரெட்டி நம்ம ஆள்... நம்ம ஆள் என்பது மட்டும் இல்லை... இந்தி ஆட்சி மொழியாகாமல் தடுத்தவர் என்று பெரியார் சொன்ன போது, அன்றைய முதல்வர், தந்தைக்கு வயதாகிவிட்டது; ஏதோ பிதற்றுகிறார் என்றார்.
1967 வரை தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தமிழ்தான் பாட மொழியாக இருந்தது. அதற்கு பிறகு ஆங்கிலம் வருவதற்கு காங்கிரஸ் காரணமா இல்லை... அதற்கு பின்னால் வந்த திராவிட இயக்கங்கள் காரணமா? ஆக, சொல்வதற்கும் செயல்படுவதற்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications