சவுக்கு சங்கர் வீட்டில் நடந்தது என்ன? டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய எம்.பி.. வெடிக்கும் விவகாரம்
சென்னை: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஊழலை அம்பலப்படுத்திய சவுக்கு சங்கரின் வீட்டில் தூய்மைப் பணியாளர்கள் கழிவுகளைக் கொட்டி அராஜகம் செய்த சம்பவம் ஏகத்துக்கும் அதிர்ச்சியைக் கொடித்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த சம்பவத்தைக் கண்டித்திருக்கின்றன. இந்த அராஜகத்துக்கு செல்வப்பெருந்தகையும், சிட்டி போலீஸ் கமிஷ்னர் அருணும் தான் காரணம் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார் சவுக்கு சங்கர். இந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, செல்வப்பெருந்தகையின் செயலை பார் என்று காங்கிரஸின் அகில இந்திய தலைவர் கார்கேவுக்கும், ராகுல் காந்திக்கும் புகார் அனுப்ப சங்கர் ஆலோசிப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இதற்காக, சங்கருக்கு நெருக்கமான எம்.பி. ஒருவர் இது குறித்து காங்கிரசின் மேலிடத்துக்கு தகவல் பாஸ் செய்திருக்கிறாராம்.

மேலும், செல்வப் பெருந்தகைக்கு எதிரான கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள், "தலைவர் பதவியில் இருந்து கொண்டு இந்த செயலை செல்வப்பெருந்தகை செய்திருக்கக்கூடாது. எந்த வடிவத்தில் பார்த்தாலும் நடந்துள்ள அராஜகம் ஜீரணிக்க முடியாதவை" என்று விவாதித்துக் கொள்ளும் அவர்கள், இந்த அராஜகத்தை காங்கிரஸின் மேலிடத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எந்த அளவுக்கு கொண்டுப் போக முடியுமோ அந்த எல்லை வரை கொண்டு செல்ல வேண்டும் என்று சங்கரின் நலம் விரும்பிகள் சொல்லி வருகின்றனர்.
காங்கிரஸ் மோதல்
ஏற்கனவே காங்கிரசில் கடுமையான உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் நியமிக்க முடியவில்லை. கோஷ்டி தலைவர்களின் அரசியலால் இந்த பட்டியல் வெளியாகவில்லை. வெளியிடவிடவில்லை. இதற்காக செல்வப்பெருந்தகை எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. இந்த சூழலில் தான் தமிழக காங்கிரஸ்சின் மேலிட பொறுப்பாளராக கிரிஷ் ஜோடங்க் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் சென்னை வந்த அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் உட்பட கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரிடமும் ஆலோசனை செய்தார்.
காங்கிரஸ் உட்கட்சி மோதல்
ப.சிதம்பரம், செல்வப் பெருந்தகை, செல்லக்குமார், திருநாவுக்கரசு, பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோரும் தனித்தனியாக ஜோடங்கிடம் விவாதித்தனர். இதன் பிறகு டெல்லி சென்ற கிரிஸ் ஜோடங்க், கட்சியின் மேலிடத்திடல் பேசியிருக்கிறார். இதனையடுத்து, இன்று சென்னை வந்த ஜோடங்க், சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்துள்ளார். குறிப்பாக, நிர்வாகிகள் நியமனம் பற்றி விவாதித்துள்ளார். இதன் முடிவில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலிடத்தின் ஒப்புதலுடன் இந்த பட்டியலை வெளியிடவிருக்கிறார் ஜோடங்க். ஒரு வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த பட்டியல், தற்போது ரிலீசாகவிருப்பதில் கதர் சட்டையினர் உற்சாகமாகியிருக்கிறார்கள். அதேசமயம், பட்டியல் ரிலீஸ் ஆகும் போது புதிய சர்ச்சை வெடிக்கும் என்றும் சொல்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் சில சீனியர்கள் மட்டும், 'கட்சி அழிஞ்சிக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் வளரணும்னா திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்ல, கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவசியம்' என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள், என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன. இதை பற்றியும் டெல்லியில் அந்த எம்பி பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications