இந்தியாவில் முதல்முறை.. மிகவும் வித்தியாசமானது.. Corbevax (கோர்ப்வாக்ஸ்) வேக்சினின் சிறப்பு தெரியுமா?
சென்னை: Corbevax (கோர்ப்வாக்ஸ்) வேக்சினுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் அவசர அனுமதி பெற்று இருக்கும் Corbevax (கோர்ப்வாக்ஸ்) குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
Recommended Video
ஹைதராபாத்தை சேர்ந்த Biological E என்று நிறுவனம் மூலம்தான் இந்த வேக்சின் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே மத்திய அரசு மூலம் 300 மில்லியன் Corbevax (கோர்ப்வாக்ஸ்) டோஸ்கள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது.
இது "recombinant protein sub-unit" வகை வேக்சின் ஆகும். அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் புரோட்டின் வகை வேக்சின். முழுக்க முழுக்க கொரோனாவில் இருக்கும் ஸ்பைக் புரோட்டின் மூலம் இந்த வேக்சின் உருவாக்கப்பட்டுள்ளது .

ஸ்பைக் புரோட்டின்
பொதுவாக கொரோனாவில் இருக்கும் ஸ்பைக் புரோட்டின்தான் உடலில் இருக்கும் செல்களை துளைத்து அதற்குள் கொரோனா நுழைய வழிவகுக்கும். இதன்பின் கொரோனா உடலில் பிரதி எடுத்தி, பல்கி பெருகி வளரும். எனவே கொரோனாவின் இந்த ஸ்பைக் புரோட்டினை உடலின் எதிர்ப்பு சக்தி அழிக்க கற்றுக்கொண்டால் கொரோனா உடலை தாக்காமல் தடுக்க முடியும்.

கொரோனா புரோட்டின் வேக்சின்
இந்த சிம்பிள் லாஜிக்கை கொண்டதுதான் Corbevax (கோர்ப்வாக்ஸ்). கொரோனாவில் இருந்து ஸ்பைக் புரோட்டினை மட்டும் எடுத்துவிட்டு. அதை லேபில் வைத்து வளர்ப்பார்கள். அமெரிக்காவில் இருக்கும் Baylor College of Medicine's National School of Tropical Medicine மூலம் இந்த முறை கண்டுபிடிக்கப்பட்டு அதை வைத்து ஹைதராபாத் நிறுவனம் மூலம் Corbevax (கோர்ப்வாக்ஸ்) வேக்சின் உருவாக்கப்பட்டது.

Corbevax (கோர்ப்வாக்ஸ்)
இந்த ஸ்பைக் புரோட்டினின் ஜீனை எடுத்து, அதேபோல் பல க்ளோனிங் ஸ்பைக் புரோட்டீன்களை உருவாக்கி உள்ளனர். இதை ஈஸ்ட் உதவியுடன் லேபிள் பியர் தயாரிக்கும் அதே முறையில் உருவாக்கி, பின்னர் ஈஸ்ட்டை நீக்கிவிட்டு, வேக்சினுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்வார்கள். பின்னர் இந்த ஸ்பைக் புரோட்டின்களை மட்டும் அப்படியே உடலில் வேக்சினாக செலுத்துவார்கள்.

கொரோனா வைரஸ்
இதில் வைரஸ் இருக்காது. வெறும் ஸ்பைக் புரோட்டின் மட்டுமே இருக்கும். இதனால் இது உடலை பாதிக்காது. ஆனால் அதே சமயம் ஸ்பைக் புரோட்டினை கண்டதும் அந்நிய ஜீவி என்பதால் நமது உடலின் எதிர்ப்பு சக்தி இதை கண்டறிந்து தாக்கி அழிக்கும். இதை உடலின் எதிர்ப்பு சக்தி நினைவில் வைத்துக்கொள்ளும். பின்னர் உண்மையில் நமது உடலில் கொரோனா நுழையும் பட்சத்தில் ஸ்பைக் புரோட்டினை உடலின் எதிர்ப்பு சக்தி எளிதாக கண்டறிந்து அழிக்க முடியும்.

புரோட்டின் வகை வேக்சின்
உடலில் ஸ்பைக் புரோட்டினை மட்டும் செலுத்தி இந்த வேக்சின் செயல்படுவதால் Corbevax (கோர்ப்வாக்ஸ்) வேக்சின் புரோட்டின் வகை வேக்சின் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் புரோட்டின் வகை வேக்சின் ஆகும் இது. கொரோனாவிற்கு எதிரான எம்ஆர்என்ஏ வேக்சின், வைரல் வேக்சின் எல்லாமே ஸ்பைக் புரோட்டினைதான் குறி வைக்கும். ஆனால் Corbevax (கோர்ப்வாக்ஸ்) வகை புரோட்டின் வேக்சின்கள் கொஞ்சம் வித்தியாசமானது.

என்ன வகை
உதாரணமாக பைசர், மாடர்னா வகை வேக்சின்கள் எம்ஆர்என்ஏ வகை வேக்சின் ஆகும். கொரோனாவின் எம்ஆர்என்ஏ வை வைத்து இந்த வேக்சினை உருவாக்குவார்கள். கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வேக்சின்கள் வைரல் வெக்டர் வேக்சின் ஆகும். மட்டுப்படுத்தப்பட்ட சாதாரண காய்ச்சல் செல்லில், கொரோனாவின் ஸ்பைக் புரோட்டினை சேர்த்து வெக்டர் வகை வேக்சினை உருவாக்கி உடலில் அனுப்புவார்கள்.

கோர்ப்வாக்ஸ் எப்படி செயல்படும்?
ஆனால் இங்கு Corbevax (கோர்ப்வாக்ஸ்)வில் நேரடியாக ஸ்பைக் புரோட்டினை மட்டுமே அனுப்பி, எதிர்ப்பு சக்தியை வர வைப்பார்கள். இதனால் இதன் எதிர்ப்பு திறன் அதிகம் இருக்கும். அதேபோல் பக்க விளைவுகள் மிக மிக குறைவாக இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications